Posts

நடுமுதலைக்குளம் கருப்பசாமிக் கோயில் மரங்கள்

Image
பண்பாட்டுச் சூழல் நடையின் 37வது பயணமாக இன்று (23.11.2025) மதுரை மாவட்டம், உசிலம்பட்டி வட்டம், செல்லம்பட்டி ஒன்றியம், நடுமுதலைக்குளம் ஊராட்சி, முதலைக்குளம் பெரியக் கண்மாய்க் கரையில் அமைந்துள்ள கருப்பசாமி கோயிலுக்கு சென்று இருந்தோம். மரங்களை அறியும் நடையாக இதனை திட்டமிட்டு இருந்தோம். கோயில் வளாகத்திலும், கண்மாய்க்கரையிலும் மதுரையில் அரிதாக காணப்படும் மரங்கள் சூழ்ந்து இருந்தன. தமிழிலக்கிய தாவரவியல் ஆய்வாளர், மதுரை மாவட்ட பசுமைக் குழு உறுப்பினர் திரு. கார்த்திகேயன் பார்கவிதை அவர்கள் ஒவ்வொரு மரங்களையும் அடையாளம் காட்டி விளக்கினார். வரும்வழியில் நடுமுதலைக்குளம் மந்தை அருகே குதிரை மீது அமர்ந்த நிலையில் உள்ள வீரன் நடுகல் ஒன்றை கண்டோம். இந்நடையில் சுமார் 20 பேர் வரை பங்கெடுத்தனர். நடுமுதலைக்குளம் ஊரைச் சேர்ந்த திரு.கார்த்திக் வழித்துணையாக இருந்து உதவினார். நடுமுதலைக்குளம் 18 ஆம் படி கருப்பசாமி கோவில் & பெரிய கண்மாய்க் கரை தாவரங்கள் கோயில் தல விருட்சம் : கருந்துவரை (Scutia myrtina) இதர மர வகைகள்: ஆலம், புண்ணிய அரசு, இச்சி, அரசு, மாவிலங்கம், அழிஞ்சில், மருதம், நாவல், புங்கை, வாகை, மஞ்சநத்தி,...

பறவைக் காணுதல் நிகழ்வு - சாமநத்தம்

Image
மதுரை மாவட்டத்தில் அதிக அளவில் நீர்நிலை சார் பறவைகள் காணப்படும் முக்கியமான நீர்நிலைகளில் ஒன்று சாமநத்தம் கண்மாய். புள்ளி மூக்கு வாத்து, தாழைக்கோழி, நீல தாழைக்கோழி, நீர்காகம், முக்குளிப்பான், அரிவாள் மூக்கன், நாமக்கோழி, நெடுங்கால் உள்ளான், சிறிய கொக்கு, நடுத்தர கொக்கு, பெரிய கொக்கு உள்ளிட்ட பறவைகள் 1000 முதல் 2000 வரையிலான எண்ணிக்கையில் கூட்டம் கூட்டமாக சாமநத்தம் கண்மாயில் இருப்பதை எப்போதும் காண முடியும். பறவைகளின் வலசை காலங்களில் பூநாரை, தகைவிலான், சூறைக்குருவி, பஞ்சுருட்டான், உள்ளான், நீலச்சிறகி என தூர தேசத்தில் இருந்து வலசை வரும் பறவைகள் கூட்டத்தையும் சாமநத்தம் கண்மாயில் காண முடியும். வலசை காலங்களில் எண்ணிக்கையின் அடிப்படையில் ஒரே நேரத்தில் 20000 முதல் 30000 பறவைகளை இங்கே காண முடியும். கடந்த 2012 முதல் 2024 வரை சாமநத்தம் கண்மாயில் 191 வகை பறவையினங்கள் ஆவணம் செய்யப்பட்டுள்ளதாக ebird.org இணையதளம் குறிப்பிடுகிறது. 2015 முதல் 2019 வரை சாமநத்தம் கண்மாயின் பறவைகளை ஆய்வு செய்த பறவையிலாளர் திரு. இரவீந்திரன் அவர்களின் ஆய்வறிக்கை இக்கண்மாயில் 150 வகை பறவைகள் இருப்பதை உறுதி செய்கிறது. மதுரை மா...