Posts

Showing posts from April, 2025

புத்தூர்மலை - பண்பாட்டுச் சூழல் நடை

Image
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி வட்டம்த்தில் உள்ள புத்தூர் மலைக்கு 20.04.2025, ஞாயிறு அன்று காலை பண்பாட்டு சூழல் நடையின் 30வது பயணமாக சென்று இருந்தோம். இந்நிகழ்வில் ஏறக்குறைய 100 பேர் வரை பங்கெடுத்தனர். மலைப்பட்டியிலிருந்து அரை கிலோமீட்டர் தெற்கில் உள்ள புத்தூர் மலையின் அடிப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள, ஆண்டிக்கல் எனப்படும் ஒரு பெரிய பாறையின் கீழ் உள்ள ஒரு கல்லில் சமணசமய தீர்த்தங்கரர்களான பாகுபலி, ஆதிநாதர், பார்சுவநாதர் மற்றும் மகாவீரர் ஆகியோரின் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இந்தச் சிற்பங்கள் பிற்பாண்டியர் காலத்தைச் சேர்ந்தவைகளாக இருக்கலாம். பாகுபலியின் உருவம் விளக்குத்தூணால் மறைக்கப்பட்டுள்ளது . இச்சிற்பங்களுக்கு இடையே ஒரு பிற்காலத் தமிழ்க் கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டின் எழுத்தமைதி தற்காலத் தமிழ் எழுத்தை பெரிதும் ஒத்துள்ளதால், இதை சென்ற நூற்றாண்டின் பின்பகுதி அல்லது இந்நூற்றாண்டின் முன்பகுதியைச் சேர்ந்ததாக ஊகிக்கலாம். இக்கல்வெட்டில், கள்ளழகர் சாமியை புதிப்பித்ததாகக் கூறும் சொற்றொடரும் மகாவீரர் மற்றும் பார்சுவநாதர் சிற்பங்களுக்கு இடையில் காணப்படும் 'பறம்மா' என்ற சொல்ல...