குன்னங்குடிபட்டி பெருங்கற்கால சின்னங்கள் (குரக்குப் படை)
குன்னங்குடிபட்டி பெருங்கற்கால சின்னங்கள்: (குரக்குப் படை) மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியம், கருங்காலக்குடி ஊராட்சியில் அமைந்துள்ளது குன்னங்குடிபட்டி ஊர். குன்னங்குடிபட்டி மலையின் தென்கிழக்கு திசையில் அரையினிபட்டி ஊருக்கு செல்லும் வழியில் சுமார் 8 ஏக்கர் பரப்பளவில் புளிந்தோப்பில் பெருங்கற்காலத்தை சேர்ந்த ஈமக்காடு காணப்படுகிறது. இப்பகுதியை குரக்குபட்டடை என்றும், குரங்குபட்டறை என்றும் மக்கள் அழைக்கின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வட்டம் திருக்கட்டளையில் அமைந்துள்ள சுந்தரேஸ்வரர் திருக்கோயிலின் தென் சுவரில் உள்ள சோழ மன்னனின் (பரகேசரி) கல்வெட்டு எல்லைகளை வரையறுக்கும்போது முதுமக்கள் தாழிகள் விரவிக் கிடக்கும் காட்டை 'கலசக்காடு' என்றே குறிப்பிடுகிறது (IPS 38). அதேபோல் நகரத்தார்மலை(நார்த்தாமலை)யில் நூற்றாண்டுச் சார்ந்த பாண்டிய உள்ள 13ஆம் மன்னன் மாறவர்மன் சுந்தரபாண்டிய தேவரின் கல்வெட்டு தாயனூர் (தாயினிப்பட்டி) குளத்தின் உள்வாயிலில் பெருங்கற்படைக் காலம் தொட்டு இன்றுவரை நிலைத்து நிற்கின்ற பெருங்கற்படைச் சின்னங்களை 'குரக்குப்...