புலிமலை, புலிப்பட்டி பண்பாட்டுச் சூழல் நடை
புலிப்பட்டி மலையில் உள்ள பாறை ஓவியங்களை பாதுகாக்கப்பட்ட தொல்லியல் சின்னமாக அறிவிக்க கோரி மதுரை மாவட்டம் மேலூர் வட்டம், புலிப்பட்டி ஊராட்சியில் அமைந்துள்ளது புலிமலை. மேலூர் வட்டம், அ. வல்லாளப்பட்டி கிராமம் புல எண்:526 & 94 ஆகிய இரண்டு சர்வே எண்களில் புலிமலை காட்டப்பட்டுள்ளது. இந்த புலிமலையில் 5000 ஆண்டுகளுக்கு முந்தைய கற்கால மனிதர்கள் வரைந்த சிவப்பு பாறை ஓவியங்களை கோவில் கட்டடக்கலை சிற்பத்துறை ஆய்வாளர் தேவி கண்டறிந்து கடந்த 2023ஆம் ஆண்டு வெளிப்படுத்தியுள்ளார். தமிழகத்தை பொறுத்தவரை, சிவப்பு பாறை ஓவியங்களை தொன்மையானது என கருதப்படுகிறது. புலி மலை பாறையில் மனித உருவங்கள், விலங்குகள், குறியீடுகள் என, 100க்கும் மேற்பட்ட சிகப்பு நிற ஓவியங்கள் உள்ளன. புலிமலையின் அடிவாரத்தில் உள்ள பெரியபுலி அய்யனார் கோயில் அருகேயுள்ள மலைப்பாறையில் கிபி 13ஆம் நூற்றாண்டை சேர்ந்த பிற்கால பாண்டியர் காலத்து கல்வெட்டுகளும் அண்மையில் கண்டறியப்பட்டுள்ளது. எனவே தமிழ்நாடு தொன்மை மற்றும் வரலாற்று சின்னங்கள், தொல்லியல் தளங்கள் பாதுகாப்பு சட்டம் 1966இன் (The Tamil Nadu Ancient and Historical Monuments ...