பெருங்குன்று
மதுரை இயற்கை பண்பாட்டு அறக்கட்டளை சார்பாக 'பண்பாட்டுச் சூழல் நடை' மாதம் ஒரு ஞாயிறு அன்று நடைபெறுகிறது. இந்நடையில் பல்வேறு துறைசார் அறிஞர்கள், ஆர்வலர்கள் பங்கேற்று, கூடமிடத்தின் புவியியல், தொல்லியல், சூழலியல் செய்திகளை ஆவணம் செய்வர். அவ்வகையில் கடந்த 17.05.2026, ஞாயிறு அன்று காலை பண்பாட்டுச் சூழல் நடையின் 42வது நிகழ்வு மதுரை மாவட்டம், பேரையூர் வட்டம், தே.கல்லுப்பட்டியில் அமைந்துள்ள தேவன்குறிச்சி மலையில் நடைப்பெற்றது. இந்நிகழ்வில் மதுரை இயற்கை பண்பாட்டு அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பாளர்கள் விஸ்வா, பாட்ரிக், தமிழ்தாசன்; காட்டுயிர் ஒளிப்பட கலைஞர்கள் மரு. ஹிமோக்ளோபின், ஜோதிமணி, பாலகிருஷ்ணா, கேசவன், கௌதமா, சூழலியல் ஆர்வலர்கள் நிலா பாண்டியன், லட்சுமி, விளாச்சேரி சதிஷ்குமார், சக்திவேல், கமலேஷ், சீனிவாசன், பெரிய நல்லதம்பி, நீச்சல்காரன் ராஜா, ஹரிபிரசாத் ஆகியோர் பங்கெடுத்தனர். புவியியல் ஆய்வாளர் ஜா. முகம்மது ஹாரிஸ் அவர்கள் மலையின் தோற்றம், தேவன்குறிச்சி மலை பாறைகளில் காணப்படும் கனிமங்கள், அதை கண்டறியும் நுட்பம் ஆகியவற்றை எடுத்துரைத்தார். பண்பாட்டு சூழலியல் ஆய்வாளர் தமிழ்தாசன் த...