கோட்டைமலை - பண்பாட்டுச் சூழல் நடை
கோட்டைமலை - பண்பாட்டுச் சூழல் நடை ====================================== மதுரை மாவட்டம் , மேலூர் வட்டம் கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பதினெட்டு சுக்காம்பட்டி ஊராட்சியில் உள்ள கோட்டைமலை குன்றுக்கு இன்று (20.10.24) காலை பண்பாட்டு சூழல் நடையின் 24 வது பயணமாக சென்று இருந்தோம் . குழுப் புகைப்படம் கோட்டைமலை: மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியம், பதினெட்டு சுக்காம்பட்டி ஊராட்சியில் அமைந்துள்ளது கோட்டைமலை. அனற்பாறை (Igneous Rock) வகைப்பட்ட ஓற்றை பாறையிலான குன்றாக (Monolith) உள்ளது கோட்டைமலை. சுமார் 820 மீட்டர் நீளமும், 260 மீட்டர் உயரமும் சுமார் 100 ஏக்கர் பரப்பளவும் கொண்டு 10.172856, 78.392062 அட்சரேகை (Lat) - தீர்க்கரேகை (Long) நில நேர்கோட்டில் அமைந்திருக்கிறது. கோட்டைமலையின் வடக்கில் கீச்சிந்தி கண்மாயும், தெற்கில் பனைமலையும் சுக்காம்பட்டி ஊரும், மேற்கில் கோணமலையும், கிழக்கில் நெல்வயல்களும் நான்குபுற எல்லைகளாக அமைந்துள்ளன. கோட்டைமலையில் முல்லைத் திணைக்குரிய உயிரினங்களையும், மக...