Posts

Showing posts from December, 2024

வறள் புல்வெளிகள், கள்ளிக்குடி - பண்பாட்டுச் சூழல் நடை

Image
 வற ள்  புல்வெளிகள், கள்ளிக்குடி - பண்பாட்டுச் சூழல் நடை        Arid Grasslands, Kallikudi - Cultural Nature Walk  மதுரை மாவட்டம், திருமங்கலம் வட்டம், கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வெள்ளாகுளம் வறள் புல்வெளிகள் பகுதிக்கு 22.12.2024 அன்று காலை  பண்பாட்டு சூழல் நடையின் 26வது பயணமாக சென்று இருந்தோம். இந்நிகழ்வில் ஏறக்குறைய 50 பேர் வரை பங்கெடுத்தனர். உலர் இலையுதிர்காடு, புதர் காடு, கோயில்காடு, பள்ளத்தாக்கு, மலை, குன்று, கரடு, பாறை, அருவி, ஆறு, சுனை, ஏரி, குளம், அணை, வயல்வெளி என மதுரை மாவட்டத்தில் காணப்படும் குறிஞ்சி, முல்லை, மருதம் உள்ளிட்ட திணை மண்டலத்தின் பல்வேறு நிலவியல் அமைப்புகள் ஊடே பயணித்து, அப்பகுதியின் முதற்பொழுது மற்றும் கருப்பொருள் குறித்த கள ஆவணங்களை சேகரித்து வந்து இருக்கிறோம். முல்லைத் திணை உயிரியல் மண்டலத்தின் ஒரு பகுதியாக விளங்கும் வற ள் புல்வெளிகளை பண்பாட்டுச் சூழலியல் நோக்கில் மதுரை கள்ளிக்குடியில் ஆவணம் செய்தோம். மதுரை மாவட்டத்தின் காணப்படும் வற ள் புல்வெளிகள் குறித்த உரையாடலுக்கு இந்நிகழ்வு வலு சேர்க்கும் என...