சோமகிரி மலை & பறம்புக் கண்மாய் - பண்பாட்டுச் சூழல் நடை
சோமகிரி மலையும் பறம்பு க் கண்மாயும் மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், மேலவளவு ஊராட்சிக்கு உட்பட்ட சோமகிரி மலைக்கு 09.02.2025 அன்று காலை பண்பாட்டு சூழல் நடையின் 28வது பயணமாக சென்று இருந்தோம். இந்நிகழ்வில் ஏறக்குறைய 50 பேர் வரை பங்கெடுத்தனர். இந்த நடையில் பெருங்கற்கால சின்னங்கள், பறம்பு கண்மாய் பாறைக் கல்வெட்டுகள், சோமகிரி மலைக் கல்வெட்டு, மலையில் கோட்டைச் சுவர்கள், கற்கோயில்கள், மலையுச்சி தீபத்தூண் கல்வெட்டு ஆகியவற்றை ஆவணம் செய்தோம். கார்த்திகை தீபத்திருவிழா, கருப்பு கோயில் மாசி திருவிழா, பங்குனி மாதம் மஞ்சுவிரட்டு, நவ்வா கந்தூரி விழா என பல்வேறு கிராமத் திருவிழாக்கள் குறித்து கேட்டறிந்து ஆவணம் செய்தோம். பல்லுயிரியங்கள் அடிப்படையில் 100க்கும் மேற்பட்ட தாவரங்கள், 80க்கும் மேற்பட்ட பறவைகள், 30க்கும் மேற்பட்ட வண்ணத்துப்பூச்சிகள், 25க்கும் மேற்பட்ட பாலூட்டி விலங்குகள் என சோமகிரி மலையின் பல்லுயிரிய வளத்தை ஆவணம் செய்தோம். சோமகிரி மலை: மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், மேலவளவு ஊராட்சியில் அமைந்துள்ளது சோமகிரி மலை. மலையின் வடக்கு பகுதி பாறை குன்றாகவும்,...