வெள்ளிமலை, மதுரை
பண்பாட்டுச் சூழல் நடை - வெள்ளிமலை மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியம், பொட்டப்பட்டி ஊராட்சி வெள்ளிமலை கிராமத்திற்கு 22.06.2025, ஞாயிறு அன்று காலை பண்பாட்டு சூழல் நடையின் 32வது பயணமாக சென்று இருந்தோம். இந்நிகழ்வில் ஏறக்குறைய 50 பேர் வரை பங்கெடுத்தனர். வெள்ளிமலை, நெடுமலை, பக்குருட்டி மலை, தேனிமலை, கோட்டைக்கரை மேடு, வெள்ளமலை, மாமலை, கருமலை என பல்வேறு மலைகள் சூழ்ந்த பகுதியாக கொட்டாம்பட்டி விளங்குகிறது. பல கோயில்காடுகள் இப்பகுதியில் உள்ளன. பாலாறும், திருமணிமுத்தாறும் பாயும் கொட்டாம்பட்டியின் பண்பாட்டுச் சூழல் விரிவாக ஆய்வு செய்யப்பட வேண்டிய களமாகும். வெள்ளிமலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஊரின் பெயரும் வெள்ளிமலை என்றே அழைக்கப்படுகிறது. அவ்வூரில் உள்ள வெள்ளிமலை சண்முகநாதர் கோயில் முன்பு அனைவரும் கூடினோம். அங்கிருந்து மலைமேல் பக்தர்கள் செல்லும் பாதையில் மலைமேல் உள்ள பாலதண்டாயுதபாணி முருகன் கோயிலுக்கு சென்றோம். அவ்விடத்தில் நின்று பார்க்கிற போது நான்குபுறமும் பசுமையான மலைகள் சூழ்ந்திருக்கும் கொட்டாபட்டியின் காட்சி அழகாய் இருந்தது. பின் கீழிறங்கி மலை அடிவாரத்தில் காலை உணவை ...