வெள்ளிமலை, மதுரை
பண்பாட்டுச் சூழல் நடை - வெள்ளிமலை
மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியம், பொட்டப்பட்டி ஊராட்சி வெள்ளிமலை கிராமத்திற்கு 22.06.2025, ஞாயிறு அன்று காலை பண்பாட்டு சூழல் நடையின் 32வது பயணமாக சென்று இருந்தோம். இந்நிகழ்வில் ஏறக்குறைய 50 பேர் வரை பங்கெடுத்தனர்.
வெள்ளிமலை, நெடுமலை, பக்குருட்டி மலை, தேனிமலை, கோட்டைக்கரை மேடு, வெள்ளமலை, மாமலை, கருமலை என பல்வேறு மலைகள் சூழ்ந்த பகுதியாக கொட்டாம்பட்டி விளங்குகிறது. பல கோயில்காடுகள் இப்பகுதியில் உள்ளன. பாலாறும், திருமணிமுத்தாறும் பாயும் கொட்டாம்பட்டியின் பண்பாட்டுச் சூழல் விரிவாக ஆய்வு செய்யப்பட வேண்டிய களமாகும்.
வெள்ளிமலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஊரின் பெயரும் வெள்ளிமலை என்றே அழைக்கப்படுகிறது. அவ்வூரில் உள்ள வெள்ளிமலை சண்முகநாதர் கோயில் முன்பு அனைவரும் கூடினோம். அங்கிருந்து மலைமேல் பக்தர்கள் செல்லும் பாதையில் மலைமேல் உள்ள பாலதண்டாயுதபாணி முருகன் கோயிலுக்கு சென்றோம். அவ்விடத்தில் நின்று பார்க்கிற போது நான்குபுறமும் பசுமையான மலைகள் சூழ்ந்திருக்கும் கொட்டாபட்டியின் காட்சி அழகாய் இருந்தது. பின் கீழிறங்கி மலை அடிவாரத்தில் காலை உணவை முடித்துவிட்டோம். மலையடிவார முருகன் கோயிலில் இருந்து 100 அடி தொலைவில் உள்ள இடும்பன் கோயிலுக்கு சென்றோம். மலையடிவார முல்லை நில புதர் காட்டினுள் இடும்பன் கோயில் அமைந்துள்ளது. இடும்பன் கோயில் வாசல் முன்பு வில்லியார் சாமி என்று மக்களால் வழிபாடு செய்யப்படும் இரண்டு நடுகற்கள் அங்கே காணப்படுகிறது. இரண்டு நடுகல்லிலும் தமிழ் கல்வெட்டுகள் காணப்படுகிறது. வில்லியார் சாமிக்கு நேர்த்தியாக இரத்தப்பலி கொடுத்து வழிபாடு செய்கிறார்கள். இதே போல வில்லியார் சாமி கோயில் புழுதிப்பட்டியில் அமைந்துள்ளது. இத்தெய்வத்தை வழிப்படும் அனைவரும் கூடி அங்கே வெகு சிறப்பாக திருவிழா எடுத்து வழிபடுகிறார்கள். சுண்டக்காரன் அய்யனார் கோயில்காடு பொட்டபட்டி ஊரிலும், சுரப்பட்டி ஊரிலும் காணப்படுகிறது. இக்கோயில்காடு குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட வேண்டும். வில்லியார் சாமி நடுகற்களை பார்வையிட்டுவிட்டு காலை 10 மணிக்கு அங்கிருந்து மதுரை நோக்கி திரும்பினோம்.

வில்லியார் சாமி நடுகற்கள் கல்வெட்டு தரும் செய்தி:
பேரா. ப தேவி அறிவு செல்வம் அவர்கள் கூறியதாவது, ''வில்லியார் சாமி நடுகல்லில் காணப்படும் கல்வெட்டை தொல்லியல் அறிஞர் கோ.சசிகலா அவர்கள் கண்டறிந்து வெளிப்படுத்தியுள்ளார். இந்நடுகற்கள் கூறும் கல்வெட்டுச் செய்தியானது வடக்கில் மங்கலம் என்னுமிடத்தில் நடைபெற்ற சண்டையில் இறந்த இருவீரர்களுக்கு நடுகல் எடுக்கப்பெற்றமையைக் குறிப்பிடுகிறது. முதலாம் நடுகல் சண்டையில் இறந்த செயிக்கன் என்பவனுக்கு அதியம் அரையன் மகன் கல்லூன்றித் தந்ததைக் குறிப்பிடுகிறது. இரண்டாம் நடுகல்லில் இறந்த வீரன் பெயர் வௌ்ளியான் எனக் கல்வெட்டுக் குறிப்பிடுகிறது. இக்கல்வெட்டில் காணப்படும் எழுத்தமைவை கொண்டு இதன் காலம் கிபி 10 - 12 நூற்றாண்டை சேர்ந்ததாக கருதலாம். இந்நடுகற்களில் இறந்த வீரர்களின் உருவங்கள் புடைப்புச் சிற்பங்களாக காட்டப்பட்டுள்ளன.
சன்ன வீரம், குறுக்கு சங்கிலி, கரண்ட மகுடம், இறுக்கிக் கட்டிய உச்சிக் கொண்டை, காதுகளில் பனையோலை தோடு, கழுத்தணிகள், இடையாடை முடிச்சு, வீரனுக்கு உரிய ஆடையுடன் வில்லும் வாளுடன் இரு சிற்பங்களும் காட்டப்பட்டுள்ளன. முதலாம் நடுகல்லில் வீரர் வலதுகையில் வில்லைத் தாங்கியும், இடதுகையில் நீண்ட வாளைப் பிடித்தபடியும் நேராக நின்ற நிலையில் உள்ளார். இரண்டாவது நடுகல்லில் வீரர் இடதுகையில் வில்லைத் தாங்கியும், வலதுகையில் நீண்ட வாளைப் பிடித்தபடியும் நேராக நின்ற நிலையில் காட்டப்பட்டுள்ளார்''.
பல்லுயிரிய வகைமை:
காட்டுமாடு, காட்டுப்பூனை, காட்டுப்பன்றி, தேவாங்கு, குறுமுயல் உள்ளிட்ட பாலூட்டி வகை காட்டு விலங்குகள் வெள்ளிமலையில் காணப்படுவதாக ஊர் மக்கள் தெரிவித்தனர். பறவையியலாளர் இறகுகள் இரவீந்திரன் மற்றும் மரு. ஹீமோக்ளோபின் அவர்கள் வெள்ளிமலை பகுதியில் 32 வகை பறவைகளை இந்நடையில் ஆவணம் செய்தனர். அமெரிக்கன் கல்லூரி விலங்கியல் மாணவர் கமலேஷ் அவர்கள் 31 வகை வண்ணத்துப்பூச்சிகளை இந்நடையில் வெள்ளிமலையில் ஆவணம் செய்தார்.
1)Crimson Rose
2)Common Rose
3)Common banded Peacock
4)Common Mormon
5)Lime Butterfly
6)Common Emigrant
7)Mottled Emigrant
8)Crimson Tip
9)White Orange Tip
10)Plain Orange Tip
11)Yellow Orange Tip
12)Common Grass Yellow
13)Small Salmon Arab
14)Common Gull
15)Common Albatross
16)Psyche
17)Common Jezebel
18)Common Wanderer
19)Blue Tiger
20)Plain Tiger
21)Common Crow
22) Double Banded Crow
23)Common Caster
24)Lemon Pansy
25)Chocolate Pansy
26)Common Sailor
27)Tawny Coaster
28)Lime blue
29)Indian Grizzled Skipper
30)Gram Blue
31)Chesnut streaked sailor
32)Black Rajah
33)Apefly
Birds documented by Dr Hemoglobin
eBird Checklist - 22 Jun 2025 - Vellimalai Murugan temple, Kottampatti - 32 species (+1 other taxa) https://ebird.org/checklist/S253001789eBird Checklist - 22 Jun 2025 - Sacred grove , near Vellimalai Murugan temple, Kottampatti - 10 species https://ebird.org/checklist/S253003454
ஒளிப்படங்கள்:
வெங்கடராமன், இரவீந்திரன், விஸ்வா, ஆறுமுகம், சக்திவேல், தமிழ்தாசன்
வெங்கடராமன், இரவீந்திரன், விஸ்வா, ஆறுமுகம், சக்திவேல், தமிழ்தாசன்
Comments
Post a Comment