இராமநாதபுரம் கிழக்கு கடற்கரையின் பல்லுயிர் சூழலும் பண்பாட்டுக் கூறுகளும்
இராமநாதபுரம் கிழக்கு கடற்கரையின் பல்லுயிர் சூழலும் பண்பாட்டுக் கூறுகளும் பண்பாட்டுச் சூழல் நடை உலக அலையாதிக்காடுகள் தினத்தை முன்னிட்டு மதுரை இயற்கை பண்பாட்டு அறக்கட்டளை ஒருங்கிணைப்பில் இராமநாதபுரம் மாவட்டம் கிழக்கு கடற்க்கரை சாலைகளில் உள்ள அலையாத்திக்காடுகள், ஆற்றின் கழிமுகங்கள், வரலாற்று தளங்கள் சென்று பார்வையிட்டோம். 27.07.2025, ஞாயிறு அன்று பண்பாட்டு சூழல் நடையின் 33வது பயணத்தில் சுமார் 30க்கும் மேற்பட்டோர் பங்கெடுத்தனர். காலை 5 மணிக்கு மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் இருந்து தனி சிற்றுந்து வாகனத்தில் புறப்பட்டு காலை 8.30 மணிக்கு இராமநாதபுரம் சுற்றுச் சாலையில் உள்ள வசந்தம் உணவகத்தில் காலை உணவை சாப்பிட்டோம். பின் அங்கிருந்து காலை 9.15 மணிக்கு இராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் வட்டம், ஆற்றாங்கரை ஊராட்சி பகுதியில் வைகை பொழிக்கு (estuary) வந்து சேர்ந்தோம். வைகையாறும் - பாக் விரிகுடா கடலும் கூடுமிடத்தை பார்வையிட்டோம். கடல்வாழ் உயிரிகள், கடல்சார் பறவைகள் குறித்து திரு. இரவீந்திரன் அவர்களும், வைகையின் கழிமுக பகுதியில் காணப்படும் தாவரங்கள் குறித்து திரு. ...