குன்னங்குடிபட்டி பெருங்கற்கால சின்னங்கள் (குரக்குப் படை)
குன்னங்குடிபட்டி பெருங்கற்கால சின்னங்கள்: (குரக்குப் படை) மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியம், கருங்காலக்குடி ஊராட்சியில் அமைந்துள்ளது குன்னங்குடிபட்டி ஊர். குன்னங்குடிபட்டி மலையின் தென்கிழக்கு திசையில் அரையினிபட்டி ஊருக்கு செல்லும் வழியில் சுமார் 8 ஏக்கர் பரப்பளவில் புளிந்தோப்பில் பெருங்கற்காலத்தை சேர்ந்த ஈமக்காடு காணப்படுகிறது. கருங்காலக்குடி கிராமம் வருவாய்த்துறை பதிவேட்டில் புல எண்: 80/2, 480/3, 480/6, 480/7 இந்த ஈமக்காடு அமைந்துள்ளது. அருகில் உள்ள நிலங்களிலும் விரிவாக ஆய்வு செய்ய வேண்டும். குன்னங்குடிபட்டி பெருங்கற்படை ஈமக்காட்டில் (Megalithic Burial Site) கற்திட்டைகள் (Dolmens) கற்பதுக்கைகள் (Cists) குத்துக்கற்கள் (Menhirs) கல்வட்டங்கள் (Stone Circle) கற்குவை வட்டங்கள் (Cairn Circle) தாழிகள் (Urns) உள்ளிட்ட 6 விதமான பெருங்கற்படை சின்னங்கள் காணப்படுகிறது. மேலும் கற்காலத்தை சேர்ந்த கூர் முனைக் கொண்ட கற்கருவிகள் (Stone Age tools) குன்னங்குடிபட்டி ஈமக்காட்டில் காண முடிகிறது. கற்பதுக்கை, கற்திட்டைகளின் பலகைக்கல் மீ...