நடுமுதலைக்குளம் கருப்பசாமிக் கோயில் மரங்கள்
பண்பாட்டுச் சூழல் நடையின் 37வது பயணமாக இன்று (23.11.2025) மதுரை மாவட்டம், உசிலம்பட்டி வட்டம், செல்லம்பட்டி ஒன்றியம், நடுமுதலைக்குளம் ஊராட்சி, முதலைக்குளம் பெரியக் கண்மாய்க் கரையில் அமைந்துள்ள கருப்பசாமி கோயிலுக்கு சென்று இருந்தோம். மரங்களை அறியும் நடையாக இதனை திட்டமிட்டு இருந்தோம். கோயில் வளாகத்திலும், கண்மாய்க்கரையிலும் மதுரையில் அரிதாக காணப்படும் மரங்கள் சூழ்ந்து இருந்தன. தமிழிலக்கிய தாவரவியல் ஆய்வாளர், மதுரை மாவட்ட பசுமைக் குழு உறுப்பினர் திரு. கார்த்திகேயன் பார்கவிதை அவர்கள் ஒவ்வொரு மரங்களையும் அடையாளம் காட்டி விளக்கினார். வரும்வழியில் நடுமுதலைக்குளம் மந்தை அருகே குதிரை மீது அமர்ந்த நிலையில் உள்ள வீரன் நடுகல் ஒன்றை கண்டோம். இந்நடையில் சுமார் 20 பேர் வரை பங்கெடுத்தனர். நடுமுதலைக்குளம் ஊரைச் சேர்ந்த திரு.கார்த்திக் வழித்துணையாக இருந்து உதவினார். நடுமுதலைக்குளம் 18 ஆம் படி கருப்பசாமி கோவில் & பெரிய கண்மாய்க் கரை தாவரங்கள் கோயில் தல விருட்சம் : கருந்துவரை (Scutia myrtina) இதர மர வகைகள்: ஆலம், புண்ணிய அரசு, இச்சி, அரசு, மாவிலங்கம், அழிஞ்சில், மருதம், நாவல், புங்கை, வாகை, மஞ்சநத்தி,...