பண்பாட்டுச் சூழல் நடையின் 37வது பயணமாக இன்று (23.11.2025) மதுரை மாவட்டம், உசிலம்பட்டி வட்டம், செல்லம்பட்டி ஒன்றியம், நடுமுதலைக்குளம் ஊராட்சி, முதலைக்குளம் பெரியக் கண்மாய்க் கரையில் அமைந்துள்ள கருப்பசாமி கோயிலுக்கு சென்று இருந்தோம். மரங்களை அறியும் நடையாக இதனை திட்டமிட்டு இருந்தோம். கோயில் வளாகத்திலும், கண்மாய்க்கரையிலும் மதுரையில் அரிதாக காணப்படும் மரங்கள் சூழ்ந்து இருந்தன. தமிழிலக்கிய தாவரவியல் ஆய்வாளர், மதுரை மாவட்ட பசுமைக் குழு உறுப்பினர் திரு. கார்த்திகேயன் பார்கவிதை அவர்கள் ஒவ்வொரு மரங்களையும் அடையாளம் காட்டி விளக்கினார். வரும்வழியில் நடுமுதலைக்குளம் மந்தை அருகே குதிரை மீது அமர்ந்த நிலையில் உள்ள வீரன் நடுகல் ஒன்றை கண்டோம். இந்நடையில் சுமார் 20 பேர் வரை பங்கெடுத்தனர். நடுமுதலைக்குளம் ஊரைச் சேர்ந்த திரு.கார்த்திக் வழித்துணையாக இருந்து உதவினார்.

நடுமுதலைக்குளம் 18 ஆம் படி கருப்பசாமி கோவில் & பெரிய கண்மாய்க் கரை தாவரங்கள்
கோயில் தல விருட்சம்: கருந்துவரை (Scutia myrtina)
இதர மர வகைகள்:
ஆலம், புண்ணிய அரசு, இச்சி, அரசு, மாவிலங்கம், அழிஞ்சில், மருதம், நாவல், புங்கை, வாகை, மஞ்சநத்தி, வெப்பாலை, இலந்தை, பூவரசு, நாட்டு கருவேலம், ஆவி, புளி, வக்கணை, தேத்தான், வாத நாரயணன், சிங்கப்பூர் செர்ரி, சீமை கருவேலம், பனை, தென்னை,
இதர தாவரங்கள்:
மனோரஞ்சிதம், துத்தி, அரிவாள்மனை பூண்டு, நாயுருவி, எருக்கு, தொய்யக்கீரை, நாய் கடுகு, தாத்தா பூ, வெடிக்காய் (R.prostrata & R tuberosa), நெய்வேலி காட்டாமணக்கு, சிறுபூனைக்காலி, குப்பைமேனி, மூக்கிரட்டை, நெருஞ்சி, சிறுபீளை, அரிவாள்மனை பூண்டு, கொழுஞ்சி, உன்னிச் செடி, பீர்க்கை, தும்பை, ஊமத்தை, அல்லி
இன்று பார்த்த பறவைகள்:
சிரால், கருங்கொண்டை நாகணவாய், பாம்புத்தாரா, நீர்காகம், உண்ணிக் கொக்கு, குளத்துக் கொக்கு, அக்கா/தவிட்டுக் குருவி, வால் காக்கை, தேன்சிட்டு, முக்குளிப்பான், அன்றில் / அரிவாள் மூக்கன், தகைவிலான், செங்குதச் சின்னான், புள்ளி ஆந்தை, புதர்ச் சிட்டு (ஆண், பெண்), பச்சைப் பஞ்சுருட்டான், அரசவால் ஈப்பிடிப்பான், நாகணவாய் (பதிவு செய்தவர்: திரு. வெங்கடராமன்)
ஒளிப்படங்கள்: திரு. வெங்கட்ராமன், விஸ்வநாத், நிலா பாண்டியன்
மதுரை இயற்கை பண்பாட்டு அறக்கட்டளை (MNCF)
Comments
Post a Comment