Posts

Showing posts from December, 2025

அந்தி நடை - கபாலி மலை

Image
பகல் நேரத்து தரிசனங்கள் வழியாகத்தான் நமக்கு இந்த பல்லுயிரியச் சூழல் பரிச்சியப்படுகிறது. பகாலடி மற்றும் இரவாடிகளை கொண்ட உலகத்தின் ஒருபகுதியைத் தான் நாம் அறிந்து வைத்திருக்கிறோம். குறிப்பாக இரவாடி உயிரினங்கள் பற்றி பகாலடி உயிரினமான மனிதன் அறிவதில்லை. பெருகிவரும் நகரங்கள் மின் விளக்குகளால் சூழப்பட்டுள்ளது. அதன் காரணமாக ஒளிமாசு (Light Pollution) அதிகரிப்பதாக ஆய்வளர்கள் எச்சரித்து வருகின்றனர். சூழல் சீர்கேடுகளில் நீர் மாசு, காற்று மாசு, ஒலி மாசு அறிந்திருப்போம். ஆனால் ஒளி மாசு என்பது நாம் அதிகம் அறியாத அல்லது உரையாடாத பகுதி. பகலுக்கும் இரவுக்கும் வேறுபாடு இல்லாத வகையில் வெளிச்சம் நகரங்களை எப்போதும் சூழ்ந்துள்ளது. இரவாடி உயிரினங்களின் இயல்பு, நடத்தை, இனப்பெருக்கம் மற்றும் இடம்பெயர்வை ஒளிமாசு பெரிதும் பாதிக்கிறது. இரவு பூச்சிகள் மின் விளக்குகளால் ஈர்க்கப்பட்டு அழிவை சந்திக்கின்றன. இதனால் உணவுச் சங்கிலி பாதிக்கப்படுகிறது. அவ்வகையில் இரவாடிகளின் உலகை அறிந்துக் கொள்ளும் வகையில் மதுரை இயற்கை பண்பாட்டு அறக்கட்டளை சார்பாக அந்தி நடை கடந்த 06.12.2025 அன்று ஒருங்கிணைக்கப்பட்டு இருந்தது. இந்நிகழ்வில் ...