Posts

Showing posts from November, 2024

கூலானிபட்டி கன்னிமார் கோயில்

Image
கன்னிமார் கோயில்  மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் , அ . வல்லாளப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட கூலானிபட்டியில் ( அட்ச ரேகை தீர்க்க ரேகை 10.046880, 78.262311)  சுமார் முப்பது ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது கருத்தமலை .  கிட்டத்தட்ட 100 அடி உயரமுள்ள இம்மலையின் தெற்கு பகுதியான கன்னிமார் பாறை உச்சியில் கன்னிமார் கோயில் ஒன்று உள்ளது . இக்கோயிலில் 1300 ஆண்டுகள் பழமையான தவ்வை சிலையும் , கொற்றவை சிலையும் ; 700 ஆண்டுகள் பழமையான வட்ட வடிவ ஆவுடையார் , நந்தி , சப்த மாதர்கள் உள்ளிட்ட சிற்பங்கள் ' மதுரை இயற்கை பண்பாட்டு அறக்கட்டளை ' குழுவினரால் 22.11.2024 கண்டறியப்பட்டுள்ளது . அரிட்டாபட்டி மலையில் இருந்து ஒரு கி . மீ இடைவெளியில் உள்ள கூலானிப்பட்டி கருத்தமலையில் இந்த பழமையான சிற்பங்கள் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது . 3000 வருடங்கள் தொன்மையான தாய் தெய்வ வழிபாட்டின் தொடர்ச்சியாக கொற்றவை , தவ்வை , சப்த மாதர்கள் ஒரே வளாகத்தில் இருப்பதும் , பழமையான செங்கல் கட்டுமான அடித்தளமும் இருப்பதும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தத...

வைகையாறு உயிர்ச்சூழல் - பண்பாட்டுச் சூழலியல் நோக்கில் ஆய்வு

Image
வைகையாறு உயிர்ச்சூழல் - பண்பாட்டுச் சூழலியல் நோக்கில் ஆய்வு ஆய்வின் நோக்கம் : வைகையாற்றின் தாவர மற்றும் பல்லுயிரிய சூழலின் நிலை குறித்து அறிந்து கொள்ளுதல் வைகையாற்றின் மீது மக்கள் கொண்டுள்ள பண்பாட்டு உறவு குறித்து அறிந்து கொள்ளுதல்   நகரமய விரிவாக்கம் வைகையாற்றின் மீது ஏற்படுத்திய தாக்கம் குறித்து அறிந்து கொள்ளுதல் வைகையாற்றி ல்   மணல் பரப்பின் நிலை குறித்து அறிந்து கொள்ளுதல் வைகையாற்றி ல்  நேரடியாக கழிவு நீர் கலக்கும் இடங்களை அறிந்து கொள்ளுதல் வைகையாற்று நீரின் தன்மை மற்றும் தரம் குறித்து அறிந்து கொள்ளுதல் வைகையாற்றின் உயிரிச்சூழலை மேம்படுத்தி, பாதுகாக்கும் நோக்கோடு தன்னார்வமாக ஆய்வு மேற்கொள்ளுதல் ஆய்வுக்காலம் & பின்னணி: தேனி மாவட்டம் மூலவைகை பகுதியான வாலிப்பாறை என்னும் மலைக்கிராமம் துவங்கி வைகையாறு கடலில் கலக்கும் கழிமுக பகுதியான ராமநாதபுரம் மாவட்டம் ஆற்றங்கரை ஊராட்சி வரை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தென்மேற்கு பருவமழையின் முடிவில் அணைகள் நிரம்பி  வைகையாற்றில்  வெள்ளம் கரைபுரண்டு ஓடும்  காலத்தில் இந்த ஆய்வு ம...