Posts

Showing posts from April, 2026

நமது பண்பாட்டில் தேர்

Image
மதுரையில் புகழ்மிக்க சித்திரை திருவிழா கலைக்கட்டி வருகிறது. தமிழ்நாட்டில் தேர் பயன்பாடு குறித்த விழிப்புணர்வை ஏற்ப்படுத்தும் வகையில் மதுரை இயற்கை பண்பாட்டு அறக்கட்டளை "தேர் பார்க்கலாம் வாங்க" நிகழ்வை 25.04.2026 அன்று ஒருங்கிணைத்தது. தேர் பயன்பாட்டின் தொன்மை குறித்த தேடுதலில் ஈடுபட்டு வரும் ஆய்வாளர் பேரா. தேவி அறிவு செல்வம் அவர்கள் தேர் குறித்த பல்வேறு தகவல்களை நிகழ்வில் பங்கெடுத்தவர்களிடம் பகிர்ந்துக் கொண்டார். கோயில் கட்டடக்கலை & சிற்பத்துறை ஆய்வாளர் பேரா தேவி அறிவு செல்வம் கூறியதாவது: ஒற்றுமைத் திருவிழாவாக ஊர்கூடி தேரிழுப்பதாக மட்டுமல்லாது, நம் பண்டைய படைப்பாளர்களின் திறன்களை உலகின் காதுகளுக்கு உரக்கச் சொல்கிற ஓர் உயரிய உன்னத அற்புத அழகிய கலை விழாவாகவும் நம்மூர்களின் தேர்த் திருவிழாக்களும், தேர்களும் இருக்கின்றன. தர்கா சந்தனக்கூடு விழா, தூய மரியன்னை சப்பரம் உலா போன்றவை நமது தேர் திருவிழாக்களை நினைவூட்டுகின்றன. குறிப்பிட்ட மதம் கடந்து, அத்தனை மதத்தினரின் உச்ச விழாக்களின் முக்கிய இடத்தை இந்த தேர் வேறுபட்ட பெயர்களில் பிடித்துக் கொண்டு மானுட நேயத்துடன் சமூக நல்லிணக்கமும் எ...