Posts

Showing posts from February, 2026

செங்காவி மார்பு பச்சை புறா மதுரையில்

Image
செங்காவி மார்பு பச்சை புறா (Orange-breasted green pigeon) முதல் முறையாக மதுரை மாவட்டம், பேரையூர் பகுதியில் காட்டுயிர் ஒளிப்பட கலைஞர் திரு. ஜோதிக்கண்ணன் அவர்களால் 03.01.2026 அன்று ஆவணம் செய்யப்பட்டுள்ளது. புறாக்கள் குடும்பத்தில் (Family: Columbidae) பச்சை புறா (Genus: Treron) பேரினத்தைச் சேர்ந்த மஞ்சள் கால் பச்சை புறா (Yellow-footed Green-Pigeon), சாம்பல் நெற்றி பச்சை புறா (Grey-fronted Green-Pigeon) மதுரை மாவட்டத்தில் மதுரை இயற்கை பண்பாட்டு அறக்கட்டளை குழுவினரால் கடந்த ஆண்டுகளில் ஆவணம் செய்யப்பட்டுள்ளது. தென்கிழக்கு ஆசிய பகுதிகளில் காணப்படும் செங்காவி மார்பு பச்சை புறாக்கள் இமாலய பகுதிகளிலும் தென்னிந்தியாவில் மேற்கு தொடர்ச்சி மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் காணப்படுகிறது. பறவைகள் கணக்கெடுப்பு போன்ற ஆவணப்படுத்தும் பணியின் போது இப்பறவைகள் அரிதாகவே தென்படுகின்றன. மதுரை மாவட்ட எல்லையாக உள்ள மேற்கு தொடர்ச்சி மலைகள் உசிலம்பட்டி முதல் சாப்டூர் வரை நீண்டுகிடக்கிறது. உசிலம்பட்டி முதல் பேரையூர் வரை உள்ள மலைத்தொடர்ச்சியும் அதன் அடிவாரப்பகுதியும் யானைகளின் வலசை பாதையாக உள்ளதென தமிழ்நாடு அரசு ...

செங்காவி மார்பு பச்சை புறா

Image
செங்காவி மார்பு பச்சை புறா (Orange-breasted green pigeon) முதல் முறையாக மதுரை மாவட்டம், பேரையூர் பகுதியில் காட்டுயிர் ஒளிப்பட கலைஞர் திரு. ஜோதிக்கண்ணன் அவர்களால் இன்று (03.01.2026) ஆவணம் செய்யப்பட்டுள்ளது. புறாக்கள் குடும்பத்தில் (Family: Columbidae) பச்சை புறா (Genus: Treron) பேரினத்தைச் சேர்ந்த மஞ்சள் கால் பச்சை புறா (Yellow-footed Green-Pigeon), சாம்பல் நெற்றி பச்சை புறா (Grey-fronted Green-Pigeon) மதுரை மாவட்டத்தில் மதுரை இயற்கை பண்பாட்டு அறக்கட்டளை குழுவினரால் கடந்த ஆண்டுகளில் ஆவணம் செய்யப்பட்டுள்ளது. தென்கிழக்கு ஆசிய பகுதிகளில் காணப்படும் செங்காவி மார்பு பச்சை புறாக்கள் இமாலய பகுதிகளிலும் தென்னிந்தியாவில் மேற்கு தொடர்ச்சி மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் காணப்படுகிறது. பறவைகள் கணக்கெடுப்பு போன்ற ஆவணப்படுத்தும் பணியின் போது இப்பறவைகள் அரிதாகவே தென்படுகின்றன. மதுரை மாவட்ட எல்லையாக உள்ள மேற்கு தொடர்ச்சி மலைகள் உசிலம்பட்டி முதல் சாப்டூர் வரை நீண்டுகிடக்கிறது. உசிலம்பட்டி முதல் பேரையூர் வரை உள்ள மலைத்தொடர்ச்சியும் அதன் அடிவாரப்பகுதியும் யானைகளின் வலசை பாதையாக உள்ளதென தமிழ்நாடு அரச...

மதுரையில் கவைவால் கொண்டைக் கரிச்சான்

Image
மதுரை மாவட்டத்தில் கவைவால் கொண்டைக் கரிச்சான் குருவி (Hair-crested Drongo – Dicrurus hottentottus) முதல்முறையாக ஆவணம் செய்யப்பட்டுள்ளது. இந்தப் பறவை சீனா, வங்காளதேசம், வடகிழக்கு இந்தியா உள்ளிட்ட பகுதிகளில் இயல்பாகக் காணப்படுகிறது. குளிர்காலங்களில் தென்னிந்திய பகுதிகளுக்கு வலசையாக வரக்கூடியது. மலர்தேன் மற்றும் பூச்சிகளை உணவாகக் கொள்ளும் இப்பறவைகள் பெரும்பாலும் சிறிய குழுக்களாகச் செயல்படுவதுடன், அதிக ஒலியெழுப்பும் தன்மையுடையவையாகும். கருமை நிறம் கொண்ட, மினுமினுப்பான உடல்தோற்றத்துடன் காணப்படும் இப்பறவையின் நெற்றியில் நீளமான, மெல்லிய முடி போன்ற இறகுகள் தெளிவாகக் காணப்படும். வால் பகுதி ஆழமாக இரண்டாகப் பிளந்த (deeply forked tail) அமைப்பைக் கொண்டது என்பது இதன் முக்கிய அடையாளமாகும். இந்த அரிய பதிவு 08.02.2026 அன்று மதுரை மாவட்டம் மஞ்சமலை அடிவாரப் பகுதியில், மருத்துவர் ஹீமோக்ளோபின் மற்றும் பாலகிருஷ்ணா அவர்களால் மேற்கொள்ளப்பட்டது. இங்கு காணப்பட்ட கவைவால் கொண்டைக் கரிச்சான், இமயமலைப் பகுதிகள் அல்லது வடகிழக்கு இந்தியாவிலிருந்து வலசையாக வந்திருக்கலாம் என கணிக்கப்படுகிறது. பொதுவாக அடர்ந்த காடுகளில் ...

ஒளிப்பட நடை - குன்னத்தூர்

Image
கடந்த 25.01.2026 ஞாயிறு காலை ஒளிப்பட நடை மதுரை, வரிச்சூர் - குன்னத்தூர் பகுதியில் நாடடைபெற்றது. இந்நிகழ்வில் 15 பேர் பங்கெடுத்தனர். இயற்கை மற்றும் வரலாற்றுத் தளங்களை எவ்வாறு காட்சியில் கொண்டு வர வேண்டும். ஒளிப்படங்கள் எவ்வாறு அமைய வேண்டும் என்பது குறித்து ஒளிப்பட கலைஞர் வீரேஷ் பங்கேற்பாளர்களுக்கு எடுத்துரைத்தார். குன்னத்தார் கண்மாய், உதயகிரி ஈஸ்வரர் குடைவரை, அஸ்தகிரிஈஸ்வரர் குடைவரை, நீலகண்டேஸ்வரர் குடைவரை உள்ளிட்ட 1300 ஆண்டுகள் பழமையான மூன்று குடைவரை கோயில்கள்; மூலபல ஈஸ்வரம், ஊர் காலவன் கோயில், தனியானை ஈஸ்வரம் கோயில், பெருமாள் கோயில் உள்ளிட்ட 800 ஆண்டுகள் பழமையான பிற்பாண்டியர் கால கோயில்கள்; பாபா புகர்தீன் தர்கா, மகாலட்சுமி கோயில் உள்ளிட்ட நாட்டார் கோயில்கள் இந்த ஒளிப்பட நடையில் காட்சியாக ஆவணம் செய்யப்பட்டது. மூன்று குடைவரை கோயில்கள் தமிழ்நாடு அரசாலும், தனியாராலும் பாதுகாக்கப்படுகிறது. பிற்பாண்டியர் கால கோயில்கள் பராமரிப்பின்றி சிதைந்த நிலையில் உள்ளது. அதை தமிழ்நாடு அரசு பாதுகாக்க வேண்டும். Photographs - Veeresh R மதுரை இயற்கை பண்பாட்டு அறக்கட்டளை (MNCF)