Posts

Showing posts from March, 2026

பறவைக் கெண்டையும் - நன்னீர் மீன்களும்

Image
     ஆறுகள், ஏரிகள், ஒடைகள், கிணறுகள் போன்ற உப்புத்தன்மை குறைந்த நன்னீர் அமைப்புகளில் வாழும் மீன்களை நன்னீர் மீன்கள் (Freshwater fishes) என்பர். அயிரை, ஆரா, உழுவை, கெண்டை, கெளிறு, குரவை, வாளை, விரால், வெளிச்சி ஆகியவை தமிழ்நாட்டில் காணப்படும் நன்னீர் மீன் வகைகள் ஆகும். இம்மீனினங்களில் பல்வேறு சிற்றினங்களும் உள்ளன. நீர்நிலைகளின் உயிரியல் மற்றும் உணவுச் சங்கிலியில் முக்கிய இணைப்பாக நன்னீர் மீன்கள் விளங்குங்கின்றன. கொசு முட்டைகளை (larvae) உண்டு நோய் பரவலை கட்டுப்படுத்துகின்றன. நன்னீர் உயிர்சூழலின் சமநிலையை பேணுகின்றன. நன்னீரின் தரம், தன்மை அதில் ஏற்படும் மாற்றங்களை அறிவுறுத்தும் உயிரினமாக (Indicator Species) நன்னீர் மீன்கள் திகழ்கின்றன. சூழலில் மட்டுமல்ல பண்பாட்டிலும் மீன்கள் முக்கிய அங்கமாக இருக்கின்றன்.      மிகத் தொன்மையான நாகரிகம் உடையதெனக் கருதப்படும் கிரெக்கம், எகிப்து, பாபிலோனியா, சீனா, இந்தியா போன்ற நாடுகளின் புராணங்களில் மீன்களைப் பற்றிய பல செய்திகள் கிடைக்கின்றன. "செழுமைக் கடவுள்" என்று போற்றப்படுகின்ற தெய்வங்களுள் 'மீனும்' முக்கிய இடத்தினை பெற்றுள்ள...

பல்லுயிரிய சூழல் பாதுகாப்பு முதன்மையாளர் விருது 2025-26

Image
மாவட்டம் அல்லது உள்ளூர் அளவில் பல்லுயிரிய சூழல் பாதுகாப்பில் சிறப்பான பங்களிப்பைச் செய்து வரும் சூழல் ஆர்வலர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களுக்கு வனத்துறை சார்பாக ‘சூழல் பாதுகாப்பு முதன்மையாளர்’ (Community Conservation Leadership Award) விருது வழங்கப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் 2025-26 ஆம் ஆண்டில் சூழல் பாதுகாப்பில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கிய பல சூழல் ஆர்வலர்களுக்கு இவ்விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த மருத்துவர் தி. பத்ரிநாராயணன், ந. இரவீந்திரன், இராமசாமி, பு.இரா. விஸ்வநாத், வெ. கார்த்திக் ஆகியோருக்கு 25.02.2026 அன்று விருது அறிவிக்கப்பட்டது. சூழல் பாதுகாப்பு முதன்மையாளர் விருது பெற்ற அனைவரும் பல்லுயிரிய சூழல் பாதுகாப்பில் சிறப்பான பங்களிப்பைச் செய்தவர்கள் என்பதில் ஐயமில்லை. அவர்கள் அனைவரும் இவ்விருதிற்கு தகுதியானவர்களே. 03.03.2026 அன்று மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் மதுரை மாவட்ட வன அலுவலர் கைகளில் 'சூழல் பாதுகாப்பு முதன்மையாளர்' விருது பெற்ற அனைவருக்கும் ‘மதுரை இயற்கை பண்பாட்டு அறக்கட்டளை’ தனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெ...