அழகர்மலை - பண்பாட்டுச் சூழல் நடை
அழகர்மலை பயணம் - மதுரை பண்பாட்டு சூழலியல் பேரவை முன்னெடுப்பில் ஞாயிறு 16.04.2023, அன்று காலை 6.30 மணிக்கு அடிவாரம் முதல் பழமுதிர்சோலை வரையில் நடைபயணம் தொடர்ந்தது.
ஒரு வழிபாட்டு தலம் என்பதை தாண்டி பல்லுயிர்களின் வாழிடம் என்பதை என்னோடு பலரும் உணர வாய்ப்பாக அமைந்தது. தாவரங்கள், பறவைகள், பூச்சிகள், ஊர்வனங்கள், நீர்நில வாழ்விகள், மெல்லுடலிகள், கணுக்காலிகள், மீன்கள் என அழகர்மலை காட்டின் உயிரோட்டதிற்கு இடைவிடாது இயங்கிக்கொண்டிருக்கும் உயிரினங்கள்.
இந்த பயணத்தில் முன்பதிவு செய்து 100க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் கலந்துகொண்டு தங்களுக்கு விருப்பமான துறை சார்த்த கானுயிர் ஆவணப்படுத்தும் பணியில் களம் கண்டனர்.
அழகர்மலை, அழகர் கோவில், இராக்காச்சி அம்மன், பழமுதிர்சோலை முருகனின் படைவீடு, கோவில் கட்டுமானம், மக்கள் வழிபாட்டு முறைகள் என பண்பாட்டு கூறுகளை பௌத்தம், சமணம், சைவம், வைணவம், நாட்டார் தெய்வ வழிபாடு என்ற கோணத்தில் வரலாற்று அறிஞர்களின் பார்வை நிகழ்வின் சிறப்பிற்குறியது.
ஒரு மலை சூழலியல் மற்றும் பண்பாட்டு இயலின் சிறப்புகள் அனைத்தையும் தன்னகத்தே கொண்டு விளங்கும் அற்புதம் அழகர்மலை.
அழகர்மலை காடுகள் இன்று தன் இயல்பை இழந்து வருகிறது. வழிநெடுக நெகிழிகள் சிதறிக் கிடக்கின்றன, அயல் உயிரினங்கள், தாவரங்கள் என காடுகளில் காணப்படுகின்றன.
இந்த பயணம் வரலாற்றில் சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சிலம்பாற்றின் தடத்தில் நிகழ்ந்தது சிறப்பு.
சிலம்பாறு, உப்பாறு என்ற இரண்டு ஆறுகள் அழகர்மலையில் இருந்து மதுரை மாவட்டம் நோக்கி பாய்கின்றன. சிற்றருவி, பெரிய அருவி, தண்ணிக்கல்லு அருவி, கொரக்கொண்ட அருவி, வண்ணான் அருவி, பேப்புலாக் கொடை, வாழக்கவியூத்து, வாவூத்து, பச்சகாச்சி ஊத்து, தாழையூத்து, எருதுமேடு ஊத்து, கருடர் தீர்த்தம், ராக்காயி தீர்த்தம், அனுமார் தீர்த்தம், பாண்டவ தீர்த்தமும், உத்தர நாராயண வாவி தீர்த்தம் என பல்வேறு ஊற்றுகளின் நீரோடைகளின் பிறப்பிடமாக அழகர்மலை உள்ளது. அழகர் மலையில் பெய்யும் மழைநீரும், நீர் ஊற்றுகளும் ஓடையாக கலந்து ஓடி, சிலம்பாறையும் உப்பாறையும் உற்பத்தி செய்கிறது.
கோடையிலும் கசிந்தோடும் நீரோடை அதன் கரைகளில் நீர் மருதங்களும், நாவல் மரங்களும் செழித்து இருந்தன. ஆற்றின் தடத்தில் செழித்து இருந்த தாது மணலின் சுவைக்கு பட்டாம்பூச்சிகள் பல்லினங்கள் மொய்த்துக் கொண்டிருந்தன. நீர் அருந்த வந்த குளவிகளும் தேனீக்களும் கண்டு வியந்தோம். காய்ந்த சருகுகளில் எங்கள் பாதம் பதிய துள்ளி குதித்து மறைந்த தவளைகள், காட்டோடையில் அயல் மீன்கள் கண்டு அதிர்ச்சி, நத்தைகள், நீரில் மிதக்கும் பூச்சிகள், தும்பிகள் என கண்ணில் பட்ட அனைத்து உயிரினங்களும் பட்டியலுக்குள் அடங்கின.
நோய்வாய்ப்பட்ட குரங்கும், காட்டு மாடும் கண்டு மனம் வருந்தியது. காட்டு பச்சை ஓணான், சாரைப்பாம்பு என ஊர்வன விலங்குகள் எங்களின் கண்ணுக்கு விருந்தாக அமைந்தது.
பறவைகள்
*Alagar Kovil - Silambaru Visit*
*42 Bird species* observed
1. Indian Peafowl - மயில்
2. Gray Junglefowl - காட்டுக் கோழி
3. Rock Pigeon (Feral Pigeon) - மாடப்புறா
4. Spotted Dove - மணிப்புறா
5. Greater Coucal - செம்போத்து
6. Blue-faced Malkoha - நீல முகப் பூங்குயில்
7. Asian Koel - ஆசிய குயில்
8. Little Swift - நாட்டு உலவாரன்
9. Asian Palm Swift - பனை உழவாரன்
10. Crested Serpent-Eagle - பாம்புண்ணி கழுகு
11. Short-toed Snake-Eagle - குட்டைக்கால் பாம்புண்ணி கழுகு
12. Black Eagle - கருங்கழுகு
13. Shikra - வைரி
14. Eurasian Hoopoe - கொண்டலாத்தி
15. White breasted Kingfisher - வெண் மார்பு மீன்கொத்தி
16. Indian Roller பனங்காடை
17. Coppersmith Barbet - செம்மார்பு குக்குறுவான்
18. Brown-headed Barbet பச்சைக் குக்குறுவான்
19. Black-rumped Flameback - பொன்முதுகு மரங்கொத்தி
20. Rose-ringed Parakeet - பைந்தாரகிளி
21. Indian Golden Oriole - மாங்குயில்
22. Black Drongo - கரிச்சான் குருவி
23. Black-naped Monarch - கரும்பிடரி நீல ஈபிடிப்பான்
24. Indian Paradise-Flycatcher - வேதிவால் குருவி
25. Rufous Treepie - வால்காக்கை
26. House Crow - காகம்
27. Large-billed Crow - கருங்காகம்
28. Common Tailorbird - தையல் சிட்டு
29. Booted Warbler - மரக் கதிர்குருவி
30. Red-rumped Swallow -
31. Red-vented Bulbul - செம்பிட்டச் சின்னான்
32. White-browed Bulbul - வெண் புருவ சின்னான்
33. Greenish Warbler - பச்சைக் கதிர் குருவி
34. Yellow-billed Babbler - தவிட்டுக் குருவி
35. Common Myna - நாகணவாய்
36. Indian Robin - கருஞ்சிட்டு
37. Oriental Magpie-Robin - குண்டுக் கரிச்சான்
38. White-rumped Shama - சோலைபாடி
39. Pale-billed Flowerpecker - மலர்கொத்தி
40. Purple-rumped Sunbird - ஊதா பிட்டத் தேன்சிட்டு
41. Purple Sunbird - ஊதா தேன்சிட்டு
42. Loten's Sunbird - நீள் அலகு தேன்சிட்டு
பட்டாம்பூச்சிகளின் அணிவகுப்பு
Swallowtails/Papilionidae:
1.Common lime - எலுமிச்சை அழகி
2.Common Mormon - கறிவேப்பிலை அழகி
3.Blue Mormon - நீல அழகி
4.Crimson Rose - சிவப்புடல் அழகி
5.Common Rose - ரோசா அழகி
6.Common Jay -
7.Tailed Jay -
8.Common Bluebottle -
9.Common Banded Peacock -
Blues/Lycaenidae:
10.Indian Sunbeam
11.Common shot Silver line
12.Common Cerulean
13.Common Pierrot
14.Lime blue
15.Gram blue
16.Zebra blue
17.Common line blue
18.Tailless line blie
19.Pointed Ciliate Blue
20.Tiny Grass blue
21.Pale Grass Blue
22.Plains cupid
23.Red Flash
24.Slate Flash
Whites & Yellows/ Pieridae:
25.Little orange tip
26.Plain orange tip
27. Great orange tip
30.Crimson tip
31.Small Salmon Arab
32.Three spot grass yellow
33.Common Grass yellow
34.Small Grass yellow
35.Common emigrant
36.Mottled Emigrant
37.Common gull
38.Common Albatross
39.Chocolate Albatross
40.Pioneer
41.Common Jezebel
42.Psyche
Nymphalidae:
43.Chocolate Pansy
44.Yellow Pansy
45.Lemon Pansy
46 Common Castor
47.Angled Castor
48.Tawny coster
49.Joker
50.Plain tiger
51.Blue Tiger
52.Dark Blue tiger
53.Glassy Tiger
54.Common crow
55.Double Banded Crow
56.White four ring
57.Common Leopard
58.Common Bushbrown
59.Common Nawab
60.Black Raja
61.Common Sailer
62.Chestnut Streaked Sailer
63.Short Banded Sailer
64. Common Lascar
Skipper/Hesperiidae:
65.White Banded Awl
66.Common Banded Awl
பூச்சிகள்
1. Lantern fly - லாந்தல் பூச்சி
2. Indian Red Bug - சிவப்பு நாவாய்பூச்சி
3. Creeping Water Bug - நீர் நாவைப்பூச்சி
4. Water Strider - நெட்டைக்கால் நீருலவி
5. Blue Marsh Hawk Dragonfly - நீல சதுப்பன் தட்டான்
6. Crimson tailed Marsh Hawk Dragonfly - பவள வால் சதுப்பான் தட்டான்
7. Crimson Marsh Glider Dragonfly - செஞ்சிறகன் தட்டான்
8. Yellow Bush Dart Damselfly - மஞ்சள் கால் ஊசித் தட்டான்.
நத்தை
1. Trumpet Snail - ஊதுகொம்பு நத்தை
நீர்நில வாழ்விகள்
1. Indian Cricket Frog - பாச்சா தவளை
2. Painted Frog - வண்ணத் தவளை
3. Skippers frog - நீர் தத்தித் தவளை
ஊர்வனங்கள்
1. Oriental Garden Lizard - கரட்டாண்டி
2. Green Forest Lizard - காட்டு பச்சை ஓணான்
3. Day Gecko - பகல் பல்லி
4. Rat Snake - சாரைப் பாம்பு
நன்னீர் மீன்கள்
1. Western Mosquito Fish - கப்பீஸ்
பாலூட்டிகள்
1. Bonnet Macaque - குல்லா குரங்கு
2. Indian Gaur- காட்டு மாடு
தாவரங்கள்
1. தணக்கம்
2. உசில் மரம்
3. வெப்பாலை
4. நாவல்
5. பெருமரம்
6. வாகை
7. மருதம்
8. பொலவு
9. நாட்டு அத்தி
10. புளி
11. பாவட்டை
12. அழிஞ்சில்
13.வரை
14. ஆத்தி
15. பராய்
16. பச்சை கிலுவை
17. குல்மொகுர்
18. ஓடங்கொடி
19. தெரணி
20. நீர்கடம்பு
21. பெருங் கடம்பு
22. மலை வேம்பு
23. ஆலம்
24. சரக்கொன்றை
25. மகிழம்
26. பவளமல்லி
27. அரசு
28. தேக்கு
29. பாதாம்
30. பெரு நெல்லி
31. செம் மந்தாரை
32. சந்தனம்
33. புங்கை
34. சீமை கருவேலம்
35. இச்சி
36. கல்இச்சி
37. வெல்வேலம்
38. மஞ்சள் கொன்றை
39. இலுப்பை
40. காட்டு ருத்ராட்சம்
41. இலவு
42. ஆடாதொடை
43. ஏழிலைப் பாலை
44. நெட்டிலிங்கம்
45. மூங்கில்
46. குகமதி
47. அம்பராத்தி
48. பனிவாகை
49. யானை கற்றாழை
50. மாவிலங்கை
51. கல்விரிசு
52. நறுவிலி
53. சீதா
54. கழர்சிக்காய்
55. மாமரம்
56. ஆமணக்கு
57. கபில கொடி
58. மூக்கிரட்டை
59. எட்டி
60. வெண் வாடாமல்லி
முதல் நடையில் இத்தனை உயிரினங்களை கண்டு பதிவு செய்த குழு மீண்டும் ஒரு பயணம் கண்டு இந்த அழகர் மலையில் பொதிந்துள்ள பல்லுயிர் வளங்களை காண காத்திருக்கிறோம்...
மதுரை பண்பாட்டு சூழலியல் பேரவை
Madurai Cultural Nature Forum
மாதம் ஒரு பயணம்
நீங்களும் இணையலாம்!
Comments
Post a Comment