குட்லாடம்பட்டி தாடகை நாச்சியம்மன் ஓடை - பண்பாட்டுச் சூழல் நடை
தாடகை நாச்சியம்மன் ஓடை - நடுவனாறு பயணம்
பண்பாட்டுச் சூழல் நடையின் பயணமாக சிறுமலையின் தெற்குசரிவில் உள்ள வாடிப்பட்டி வட்டம் குட்லடம்பட்டி தாடகை நாச்சியம்மன் ஓடைக்கு கடந்த 03.12.2023 அன்று சென்று இருந்தோம்.
சிறுமலையின் தெற்கு சரிவின் ஒரு பகுதி மதுரை மாவட்ட வனத்துறைக்குட்பட்ட சோழவந்தான் வனச்சரக எல்கைக்குள் வருகிறது. வனத்துறையிடம் மலையேற்றத்திற்க்கான நுழைவு சான்றுக்கு விண்ணப்பித்து, வனத்துறையின் வழிகாட்டல் நெறிமுறைகளோடு குட்லாடம்பட்டி மலையடிவாரத்தில் இருந்து காலை 6 மணிக்கு தாடகைநாச்சியம்மன் ஓடை நோக்கி மலையேற துவங்கினோம். வனத்துறை அதிகாரிகள், வனக்காவலர்கள் துணையோடு சுமார் 35 பேர் இரண்டு குழுக்களாக மலையேற துவங்கினோம். செல்லும் வழியெங்கும் பறவைகள், பூச்சிகள், எட்டுக்காலிகள், வண்ணத்துப்பூச்சிகள், தாவரங்கள் ரசித்தவாறு மலையேறினோம்.மலை நீரோடையின் அருகிலுள்ள தாடகை நாச்சியம்மன் கோயிலை காலை 7.30 அளவில் அடைந்தோம். ஓடை நீரை குடித்தும், குளித்தும் கொஞ்சம் இளைப்பாறினோம். சாம்பல் மந்தி, கேடயவால் பாம்பு, தாடகை நாச்சியம்மன் கோயில், ஓடை, சிறுமலையின் பல்லுயிர் வளம் குறித்து வந்திருந்த துறைசார் ஆய்வாளர்கள் உரையாற்றினார்கள். காலை உணவை அங்கே அமர்ந்து உண்டுவிட்டு காலை 9.30 அளவில் மலை இறங்க துவங்கி, காலை 10.30 மணிக்கு தரையிறங்கிவிட்டோம். இப்பயணம் குறித்து துறைசார் ஆய்வாளர்களின் கருத்துகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
தடாகை அம்மன் கோயில் குறித்து கோயில் கட்டிடக்கலை & சிற்பத்துறை ஆய்வாளர் பேரா. ப. தேவி அறிவு செல்வம் அவர்கள் பேசியதாவது:
குட்லாடம்பட்டி அருவி அருகே உள்ள பாதை வழியாக சென்றால் இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் கோயில் உள்ளது. இங்கு கோயில் என்பது ஆண்டிச்சாமி, தடாகை அம்மன், கருப்பணசாமியாக வெட்ட வெளியில் இருக்கிறார்கள். உருவங்கள் களரி திருவிழாவின் பொழுது வைக்கப்படும் பச்சை மண் உருவங்களே. மதுரை மீனாட்சி அம்மன் முன்பு இங்கு இருந்ததாக சொல்லப்படுகிறது. இக்கோயிலில் புரட்டாசி மாதத்தில் இரண்டு நாள் திருவிழாவாக களரி திருவிழா நடைபெறுகிறது. இது இரண்டிலிருந்து ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறுகிறது. அப்பொழுது மண்ணால் செய்யப்பட்ட ஆண்டிச் சாமி(மண்டபம் தாடியுடன் முனிவர் போன்று அமர்ந்த நிலையில், 10 வருடங்களுக்கு முன்பு இவர் இல்லை), தடாகையம்மன் (உருவத்தில் 7 கன்னிமார்களின் சிலையாக) கருப்பணசாமி கையில் அருவாளுடன் நாயை வாகனமாக கொண்டு எடுக்கப்படுகிறது. திருவிழாவின் பொழுது வேண்டுதலாக மக்கள் கை, கால், ஆடு, மாடு குழந்தை போன்ற உருவங்களை செய்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றுகிறார்கள். திருவிழாவில் சூலாடு (சினை / கருவுற்ற ஆடு) பலி கொடுக்கிறார்கள். பொன்னுருகி பகுதிக்கு கீழே கன்னிமாருக்கும், பூச்சமலையாண்டிக்கும் கோயில் உள்ளது. Blepharis boerhavifolia. என்னுடைய தாவர மருந்தியல் துறையின் பட்ட மேற்படிப்பின் ஆய்வுக்கான animal studies க்கு மிருகவதையில்லாத மருத்துவ பயனை கண்டறியும் விதமாக diuretic activity யை தேர்ந்தெடுத்தேன். அந்த தாவரத்தை பாளையங்கோட்டையில் இருந்து வாங்கினேன். இந்தப் பயணத்தில் என்னுடைய பட்ட மேற்படிப்பிற்கான தாவரத்தை நேரில் கண்ட பொழுது அளவில்லா மகிழ்ச்சி. இத்தாவரம் மலை எங்கும் பரவி வளர்ந்துள்ளது. இம்மலையில் திரு. பாசிமணி என்பாரின் குடும்பம் பாரம்பரியமாக வேளாண்மை செய்து வருகிறது. ஆங்கிலேயர் காலத்தில் அவரின் குடும்ப முன்னோர்களுக்கு வேளாண்மை செய்வதற்கும் அதற்கு இந்த மலைப்பாதையை பயன்படுத்தி கொள்ளவும் உரிமையளித்து செப்பு பட்டயம் வழங்கப்பட்டுள்ளது. இப்போது அவர் மட்டும் தனியாக இந்த காட்டிற்குள் தங்கி வேளாண்மை செய்து வருகிறார். பலா, மிளகு, வாழை, பாக்கு உள்ளிட்ட மலைப்பயிர் வேளாண்மை செய்கிறார்
ஊர்வனங்களின் ஆய்வாளர் விஸ்வா அவர்கள் பேசியதாவது: சிறுமலை என்பது கிழக்கு தொடர்ச்சிமலையின் ஒரு அங்கம். சிறுமலையின் பல்லுயிர் சூழல் குறித்து விரிவான ஆவணங்கள், ஆய்வுகள் பெரிதளவில் இல்லை. பொதுழுபோக்கு என்பதாக இல்லாமல் இம்மாதிரியான பயணங்களை பல்லுயிர் சூழலை ஆவணம் செய்யும் பயனுள்ள ஒரு பொழுதாக மாற்றிக் கொள்ள அனைவரும் முன்வர வேண்டும். சிறுமலையில் செந்நாய், மரநாய், புணுகுபூனை, கேளையாடு, புள்ளிமான், கடாமான், சருகுமான், தேவாங்கு உள்ளிட்ட காட்டு விலங்குகள் ஆவணம் செய்யப்பட்டுள்ளது.
பறவை ஆர்வலர் மருத்துவர் ஹீமோகுளோபின் பேசியதாவது: இன்றைய பயணத்தில் நான் ஏறக்குறைய 35 பறவைகளை பதிவு செய்தேன். ஓணான் கொத்தி கழுகு, கரும்பருந்து, சோலைப்பாடி, வெளிர் அலகு பூங்குத்தி உள்ளிட்ட 35 பறவைகளை பார்த்தும், குரலோசை கேட்டும் பதிவு செய்ய முடிந்தது. https://ebird.org/checklist/S155643688
நீரியல் வழித்தடங்களை ஆய்வு செய்யும் தமிழ்தாசன் பேசியதாவது: சிறுமலையின் தென்சரிவில் பொன்னுருக்கி என்னுமிடத்தில் உற்பத்தியாகி, சோத்தாறு, நடுவனாறு வழியாக மலையின் ஊடே ஓடி தாடகைநாச்சியம்மன் கோயில் அருகே குட்லாடம்பட்டி அருவியாக விழுந்து மீனம்மாள் கண்மாய், அப்புச்சி கண்மாய், கொண்டம்பட்டி கண்மாய், குட்லாடம்பட்டி கண்மாய், கொட்டமடை கண்மாய், தாதம்பட்டி கண்மாய் நிறைத்து சோழவந்தான் வடகரை கண்மாய் கடந்து வைகையாற்றில் கலக்கிறது. பாம்பாற்று ஓடையும், சம்பவோடையும் குட்லாடம்பட்டி கண்மாயில் கலக்கிறது.
மதுரை நகரத்திற்கு திரும்பி வரும் வழியில் முழு கொள்ளவையை தாண்டி நிரம்பி வழியும் சாத்தையாறு அணையை கண்டு ரசித்து வந்தோம்.
ஒளிப்படங்கள்: ஒளிப்பட கலைஞர்கள் திரு.ஜோதிமணி, ஜோதிகண்ணன், ஞானதேசிகன், விசுவா, கிருஷ்ணமூர்த்தி, இரவீந்திரன், வீரேஷ்
Madurai Nature Cultural Foundation
மதுரை இயற்கை பண்பாட்டு மையம்
09.12.2023
---------------------------
இதே போல ஒரு வாரத்திற்கு முன்பு 25.11.2023 அன்று பல்வேறு துறை சார்ந்த ஆய்வாளர்களோடு இதே மலையேற்ற பாதையில் குட்லாடம்பட்டி முதல் நடுவனாறு வரை மலையேறினோம். அன்று (25.11.2023) பதிவு செய்த பல்லுயிர்களின் பட்டியலையும் கீழே கொடுத்துள்ளோம்.
பறவையியலாளர் திரு. இரவீந்திரன் அவர்களின் பறவைகள் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:
Bird Species & Count
Indian Peafowl (Pavo cristatus) 3
Eurasian Collared-Dove (Streptopelia decaocto) 3
Spotted Dove (Spilopelia chinensis) 1
Laughing Dove (Spilopelia senegalensis) 2
Greater Coucal (Centropus sinensis) 3
Common Hawk-Cuckoo (Hierococcyx varius) 3
Little Swift (Apus affinis) 3
Indian Pond-Heron (Ardeola grayii) 1
Short-toed Snake-Eagle (Circaetus gallicus) 3
Bonelli's Eagle (Aquila fasciata) 1
Asian Green Bee-eater (Merops orientalis) 2
Coppersmith Barbet (Psilopogon haemacephalus) 1
White-cheeked Barbet (Psilopogon viridis) 6
Rose-ringed Parakeet (Psittacula krameri) 3
Indian Pitta (Pitta brachyura) 4
Large Cuckooshrike (Coracina macei) 1
Common Woodshrike (Tephrodornis pondicerianus) 1
Common Iora (Aegithina tiphia) 2
Black Drongo (Dicrurus macrocercus) 3
Ashy Drongo (Dicrurus leucophaeus) 1
Indian Paradise-Flycatcher (Terpsiphone paradisi) 5
Brown Shrike (Lanius cristatus) 2
Rufous Treepie (Dendrocitta vagabunda) 4
House Crow (Corvus splendens) 2
Large-billed Crow (Corvus macrorhynchos) 7
Jungle Prinia (Prinia sylvatica) 1
Barn Swallow (Hirundo rustica) 7
White-browed Bulbul (Pycnonotus luteolus) 5
Red-vented Bulbul (Pycnonotus cafer) 8
Puff-throated Babbler (Pellorneum ruficeps) 4
Yellow-billed Babbler (Argya affinis) 5
Indian Robin (Copsychus fulicatus) 2
Oriental Magpie-Robin (Copsychus saularis) 2
White-bellied Blue Flycatcher (Cyornis pallidipes) 3
Tickell's Blue Flycatcher (Cyornis tickelliae) 1
Pied Bushchat (Saxicola caprata) 2
Pale-billed Flowerpecker (Dicaeum erythrorhynchos) 6
Purple-rumped Sunbird (Leptocoma zeylonica) 2
Purple Sunbird (Cinnyris asiaticus) 3
Jerdon's Leafbird (Chloropsis jerdoni) 2
தமிழிலக்கிய தாவரவியல் ஆய்வாளர் திரு. கார்த்திகேயன் பார்கவிதை அவர்கள் தொகுத்த தாவரங்களின் பட்டியல் கீழ்வருமாறு:
தணக்கம், எட்டி, மிதி கீரை, உன்னி கம்யூனிஸ்ட்/காங்கிரஸ் பச்சை உசிலை, இலந்தை, வேம்பு, புளி, வெள்வேலம், பேராமுட்டி, கொழுஞ்சி, வாகை, மா, தேக்கு, புங்கை, நாவல், தாத்தா பூ, எருக்கு, மலை முடக்கத்தான், ஆவாரை, Barleria sp. தம்பட்டை அவரை, Gardenia sp, இண்டு, கழற்சி, நாயுருவி, புலிச்சுவடி, குருந்தம், குன்றிமணி, நெய் குருந்தம், விஷ்ணு கரந்தை, நொச்சி, சிலந்தி நாயகம், காட்டு சுண்டை, பாவட்டை, Grewia hirsutus, நேத்ரம் பூண்டு, முள் கிளுவை, வெப்பாலை, இலை பிரண்டை, காட்டு துளசி, விசிறி பனை, தவசி முருங்கை, பச்சை கிளுவை, சுக்கு நாறி புல், கோபுரம் தாங்கி, சென்னி, எழுத்தாணி பூண்டு, தொட்டா சிணுங்கி, ஆவி மரம், ஆங்காரவல்லி, Lantana indica, கொட்டை இலந்தை, சிவப்பு எள், கல் அத்தி, பெரணி வகை, பாஞ்சான் வகை, ஆலம், செருந்தி, மகிழம், மஞ்சள் கிலுகிலுப்பை, ஆற்று வஞ்சி, புனிவரசு, பேய்மிரட்டி Schefflera sp., மலை ஆவாரை, Ficus virens?, தேத்தான், வீரை, நௌகு, பொலவு, வெண் பூலா, ஆத்தி, தடசு, வெக்காலி, பிரண்டை, காசுகட்டி, ஓரிதழ் தாமரை, பனிவாகை, முள் கிளுவை, வலம்புரி, சூரை இலந்தை, மேலா நெல்லி, சீதேவி செங்கழுநீர், மூக்கிரட்டை, காகா முள், நன்னாரி, கீழா நெல்லி, சிறு புள்ளடி, களா, கொழுக்கட்டைத் தேக்கு (Premna tomentosa), தெரணி, உதியம், Sterculia urens, பூனை மீசை, காரை, குருவிச்சி, வேலி பருத்தி, மருள் ஊமத்தை, செம்பூலா, பேயத்தி, அமலை, நிலப்பனைக் கிழங்கு, நீர் மருதம், நீர்க்கடம்பு, Habenaria Plantaginea
காட்டுயிர் ஆய்வாளர் திரு. சாம்சன் அவர்களின் பல்லுயிர் பட்டியல் தொகுப்பு கீழ்வருமாறு:
Snakes
1, Srilankan flying snake (Chrysopelea taprobanica)
Lizards
1, Garden lizard (calotes versicolor)
Geckos
1, Dwarf gecko (Cnemaspis sp.)
2, Sirumalai Rock Gecko (Hemidactylus sirumalaiensis)
Arachnids
1, Whip scorpion
2, Isometrus sp.
3, Pear shaped leucauge spider (Leucauge fastigata)
4, Golden orb web spider (Nephila pilipes)
5, Nephila sp.
Frogs
1, Fejervarya sp.
2, Euphlyctis sp.
3, Indosylvirana sp.
Mammals
1, Palm civet
2, Bonnet Macaque
Damselfly
1, Stream Ruby (Heliocypha bisignata)
2, Stream Glory (Neurobasis chinensis)
3, Indian blue bambootail (Caconeura ramburi)
Dragonfly
1, Crimson Marsh glider (Trithemis aurora)
2, wandering glider (Pantala flavescens)
Insects
1, Indian praying mantis
Butterfly
1, Southern Birdwing (troides minos)
2, Common lascar (Pantoporia hordonia)
3, Malabar spotted flat (Celaenorrhinus ambareesa)
4, Glad eye bush brown (Mycalesis patnia)
நன்னீர் மீன்கள் குறித்து ஆய்வு செய்துவரும் ஆய்வாளர் திரு. அரவிந்த் அவர்களின் பட்டியல் கீழ்வருமாறு:
1. Water Slider (Gerridae Sp.)
2. Water Scavenger Beetle (Hydrophilidae Sp.)
3. Dragon Fly Larvae
ஊர்வன ஆய்வாளர் திரு.விஸ்வா அவர்களின் பல்லுயிர் பட்டியல் தொகுப்பு கீழ்வருமாறு:
1. 𝙋𝙤𝙡𝙮𝙥𝙚𝙙𝙖𝙩𝙚𝙨 𝙢𝙖𝙘𝙪𝙡𝙖𝙩𝙪𝙨 - இந்திய மரத்தவளை
2. 𝙍𝙖𝙩𝙝𝙞𝙣𝙙𝙖 𝙖𝙢𝙤𝙧 - புதிர்நீலன் பட்டாம்பூச்சி
3. 𝙀𝙪𝙩𝙝𝙖𝙡𝙞𝙖 𝙖𝙘𝙤𝙣𝙩𝙝𝙚𝙖 - கனிச்சிறகியின்
4. 𝙄𝙣𝙙𝙤𝙨𝙮𝙡𝙫𝙞𝙧𝙖𝙣𝙖 (sp) 𝙨𝙧𝙚𝙚𝙣𝙞 - பொன்முதுகு தவளை
5. Uropeltidae - கேடயவால் பாம்பு
6. Semnopithecus - சாம்பல் மந்தி
7. Bonnet macaque - குல்லாய் குரங்கு

Comments
Post a Comment