திடியன்மலை - பண்பாட்டுச் சூழல் நடை

 திடியன்மலை பயணம் மதுரை பண்பாட்டு சூழலியல் பேரவையின் 7 ஆம் மாத நடை ஞாயிறு 13.08.2023 அன்று காலை 7 மணி முதல் 10 மணிவரை 40திற்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் மலையின் அடிவாரத்தில் ஒன்றுகூடியது.



மலையின் இயற்கை நிலவியல் அமைப்பு, பல்லுயிர்கள், சைவ வைணவ வழிபாட்டு சிலைகள் என பல தலைப்புகள் வல்லுனர்களால் குறிப்புகள் வழங்கப்பட்டது.
வானத்தில் பறந்த ஓணான் உண்ணிக் கழுகு(Short Toed Eagle), குக்குறுவான் (Copper Smith Barbet), பைந்தாரக் கிளிகள் (Rose Ringed Parakeet) கூட்டம், சுடலைக் குயிலின் (Jacobins Cuckoo) கீதம், நீர் வற்றிய குளத்தில் தாமரை செடிப் புதர் உள்ளே தாழைக் கோழி, தேன் சிட்டுகளை கடந்து சென்ற நாங்கள் கண்டது மரத்தின் மேல் கூடு கட்டி வாழும் சூவை எறும்புகள் (Weaver Ant), தொடர்ந்து ஓசை எழுப்பிய சில்வண்டுகள் (Cicada), குறிச்சி மரம், கொரண்டி மரம், நாவல் பழத்தை சுவைத்தது, என பல்லுயிர் சூழல் சூழ்ந்த ஒரு இடத்தில் நடை, அரச மரத்தடியில் புள்ளி ஆந்தை வரவேற்க வெண்பொங்கல் வடையுடன் இனிதே பயணத்தை நிறைவு செய்தோம். விரைவில் அடுத்த நடைக்கான அறிவிப்பு வரும்.
அனைவருக்கும் நன்றி
Madurai Nature Cultural Foundation

#maduraibiodiversity
#maduraibirds
#MaduraiHeritage

Comments

Popular posts from this blog

கள்ளங்காடு பெருங்கற்கால சின்னங்களும் அழகுநாச்சியம்மன் கோயில்காடும்

வைகையாறு உயிர்ச்சூழல் - பண்பாட்டுச் சூழலியல் நோக்கில் ஆய்வு

வறல் புல்வெளிகள், கள்ளிக்குடி - பண்பாட்டுச் சூழல் நடை