உலக மரபு நாள் - அரசு அருங்காட்சியகம், மதுரை
உலக மரபு நாள் - அரசு அருங்காட்சியகம், மதுரை
உலக மரபு நாள் ஆண்டுதோறும் ஏப்ரல் 18 ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. அதனையொட்டி ஒரு வாரம் மரபு சின்னங்கள் அமைந்துள்ள இடங்களை பார்வையிடுவதும், அதன் முக்கியத்துவம், பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் உலகம் முழுதும் நடைபெறும் நிகழ்வாகும்.
மதுரை காந்தி நினைவு அருங்காட்சியம் வளாகத்திற்குள் அமைந்துள்ள அரசு அருங்காட்சியகத்திற்கு நேற்று (24.034.2024) காலை குழந்தைகள், மாணவர்கள், பெரியவர்கள் என பலர் வந்து இருந்தனர். கோயில் கட்டடக் கலை & சிற்பத்துறை ஆய்வாளர் பேரா. தேவி அறிவு செல்வம் அவர்கள் அரசு அருங்காட்சியத்தில் உள்ள சிற்பங்கள், நடுகற்கள், சதிக்கல், முதுமக்கள் தாழி, ஐம்பொன் சிலைகள், கலை பொருட்கள் அதன் வரலாறு, அமைப்பு, பயன்பாடு குறித்த பங்கேற்ப்பாளர்களுக்கு நேரடியாக சுட்டி காண்பித்து விளக்கினார். நிகழ்வுக்கு பிறகு ஒரு குழுப் புகைப்படம் எடுத்துக் கொண்டு நிறைவு செய்தோம். பேரா. தேவி அவர்களின் உரை இந்த லிங்லில் உள்ளது.
https://www.facebook.com/share/v/WfK4UbYFLao5p9Hq/?mibextid=oFDknk
https://www.facebook.com/share/v/WsuvT3j2VVvV4N48/?mibextid=oFDknk
மதுரை இயற்கை பண்பாட்டு மையம்
Comments
Post a Comment