சாமநத்தம் - பண்பாட்டுச் சூழல் நடை

பண்பாட்டுச் சூழல் நடை - சாமநத்தம்


கடந்த ஞாயிறு 15.10.2023 ஞாயிறு அன்று சாமநத்தம் கண்மாய் சேர்மத்தாய் வாசன் கல்லூரியில் 70 திற்கும் மேற்பட்ட பங்கேற்ப்பாளர்கள் கூடினார்கள். அனைவரையும் வரவேற்று பேரவையின் நோக்கம் குறித்து தமிழ்தாசன் விளக்கவுரை வழங்கி அனைவரையும் வரவேற்றார்.





நிகழ்வின் தொடக்கமாக நடுகல் வரலாற்று ஆர்வலர் பேரா.ப. தேவி அறிவுசெல்வம் அவர்கள் சாமநத்தம் - கிராம பெயரின் காரணத்தை சமணர்கள் கழுவேற்றம், சைவ சமண மதங்களின் மோதல்கள், அரசன் கூன் பாண்டியன் தொடர்புடைய கதை என விவரித்தார். பின்னர் பறவையியலாளர் இறகுகள் இரவீந்திரன் அவர்கள் சாமநத்தம் கண்மாயின் உள்நாட்டு மற்றும் வலசை வரும் பறவைகள், அவைகள் சந்திக்கும் வாழிட அழிவுப் பிரச்சனை குறித்தும் தான் செய்த ஆய்வுகள் குறித்தும் விவரித்தார். பறவையியல் வல்லுநர் மரு. பத்ரி நாராயணன் அவர்கள் பறவை காணுதல் மற்றும் பதிவு செய்யும் முறைகளை விளக்கினார். பின் கல்லூரியின் நூலகத்திற்கு "ஐ பாம்பு" நூலினை ஆசிரியர் விஷ்வா நாகலட்சுமி வழங்கினார், "நறுங்கடம்பு" நூலினை ஆசிரியர் கார்த்திகேயன் பார்கவிதை வழங்கினார், மதுரை "நடுகற்கள்" நூலினை ஆசிரியர் தேவி அறிவு செல்வம் வழங்கினார். சாமநத்தம் கண்மாயில் கடந்த 10 வருடங்களாக பறவைகள் குறித்து செய்த ஆய்வினை ஆய்வறிக்கையாக வெளியிட்டார். அதனை இக்கூட்டத்தில் ஒப்படைத்தார். பயணத்தில் 50க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் கண்டு பதிவு செய்யப்பட்டது. நிகழ்வின் முடிவில் சிறுதானிய ஆண்டு முன்னிட்டு அனைவருக்கும் அன்னவயல் காளிமுத்து அவர்கள் - தயாரித்த கம்மங்கூழ் காலை உணவாக வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் மேலும் பல தன்னார்வலர்கள், சுற்றுசூழல் ஆர்வலர்கள், கல்லூரி பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.





















மதுரை இயற்கை பண்பாட்டு மையை (MNCF)
15.10.2023

Comments

Popular posts from this blog

கள்ளங்காடு பெருங்கற்கால சின்னங்களும் அழகுநாச்சியம்மன் கோயில்காடும்

வறள் புல்வெளிகள், கள்ளிக்குடி - பண்பாட்டுச் சூழல் நடை

அருவிமலை - பண்பாட்டுச் சூழல் நடை