சதுரகிரி மகாலிங்கம் கோயில் மலைப்பாதை வண்ணத்துப்பூச்சிகள்
சதுரகிரி மகாலிங்கம் கோயில் மலைப்பாதை வண்ணத்துப்பூச்சிகள்
Butterflies Check List of Mahalingam Sivan Temple, Sathuragiri, Saptur
| Southern Bluebottle |
உலகில் ஏறக்குறைய 20,000 வகையான வண்ணத்துப்பூச்சிகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்தியாவில் 6 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 1,800 வண்ணத்துப்பூச்சி இனங்கள் இதுவரை கண்டறிந்துள்ளனர். தமிழகத்தில் 323க்கும் மேற்பட்ட வண்ணத்துப்பூச்சி இனங்கள் உள்ளதாக தமிழ்நாடு வனத்துறை 2018 ஆம் ஆண்டு வெளியிட்ட தமிழ்நாட்டின் வண்ணத்துப்பூச்சிகள் நூல் குறிப்பிடுகிறது.
| Malabar Spotted flat |
மதுரை மாவட்டத்தில் காணப்படும் பாலூட்டி வகை காட்டுயிர்கள், ஊர்வன வகைப்பட்ட உயிரினங்கள், பறவைகள், வண்ணத்துப்பூச்சிகள், தட்டான்கள், நன்னீர் மீன்கள் என உருவத்தில் பேருயிர்கள் துவங்கி சிற்றுயிர்கள் வரை ஆவணம் செய்து வருகிறோம். மதுரை மாவட்டத்திற்க்கென்று அடிப்படையான உயிரினங்கள் பட்டியல் தரவுகள் இல்லை. அதனை உருவாக்கும் முயற்சியில் கடந்த 10 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறோம். அதன் நீட்சியாக கடந்த 28.12.2024 அன்று மதுரை மாவட்டம் பேரையூர் வட்டம், து.கிருஷ்ணாபுரம் பகுதியில் இருந்து சதுரகிரி மகாலிங்கம் கோயில் செல்லும் மலைப்பாதை வரை காட்டுயிர் ஆய்வளார் திரு. இரா. விஸ்வநாத் மற்றும் குழுவினர் பயணம் மேற்கொண்டனர். அந்த பயணத்தில் சுமார் 59 வகை வண்ணத்துப்பூச்சி இனங்கள் அன்றைய நாளில் கண்டறியப்பட்டது. மதுரை இயற்கை பண்பாட்டு அறக்கட்டளை சார்பில் மதுரை மாவட்ட வண்ணத்துப்பூச்சி இனங்களின் பட்டியல் மற்றும் பதிவேட்டை பராமரித்து வருகிறோம். அதனோடு ஒப்பிட்டு பார்க்கையில் சதுரகிரி மகாலிங்கம் கோயில் பயணத்தில் எங்கள் பட்டியலில் இல்லாத ஏழு வகை வண்ணத்துப்பூச்சிகளை முதல்முறையாக மதுரை மாவட்டத்தில் ஆவணப்படுத்தியுள்ளோம்.
தென்னக நீல சங்கழகன், (Southern Banded Bluebottle), மயில் தோரணையன் (Peacock Royal), வரிக்கோடு ஐந்து வளையன் (Striated Five Ring), மலபார் புள்ளி இலையொட்டி, (Malabar Spotted Flat), அடர்நிற புற்த்துள்ளி (Dark Palm Dart), காவித் துள்ளி (Orange Owlet), நீலகிரி நால்வளையன் (Nilgiri Four ring) உள்ளிட்ட 7 வகை வண்ணத்துப்பூச்சிகள் மதுரை மாவட்டத்தில் முதல்முறையாக இந்த பயணத்தில் பதிவு செய்துள்ளோம். சதுரகிரி மலைப்பாதையில் மொத்தம் 59 வகை வண்ணத்துப்பூச்சிகளை பதிவு செய்துள்ளோம். எங்கள் கணக்கெடுப்பின்படி மேலே குறிப்பிட்டுள்ள ஏழு வகை வண்ணத்துப்பூச்சிகளையும் சேர்த்து இதுவரை 162 வகை வண்ணத்துப்பூச்சிகளை கடந்த 10 ஆண்டுகளில் மதுரை மாவட்டத்தில் பதிவு செய்துள்ளோம்.
| Orange Awlet |
மதுரை மாவட்டத்தில் சதுரகிரி, வாசிமலை, சிறுமலை, அழகர்மலை, நாகமலை, எத்திலா மலை உள்ளிட்ட மலைத்தொடர்களிலும் அதன் அடிவார பள்ளத்தாக்கு பகுதியிலும் வண்ணத்துப்பூச்சிகளை பரவலாக காண முடியும். பாலமேடு சாத்தையாறு அணை, ம. கல்லுப்பட்டி அய்யனார் கோயில் அணை, உசிலம்பட்டி அசுவமா நதி அணை, குலசேகரன்கோட்டை பழனியாண்டவர் அணை, கேசம்பட்டி பெரியருவி அணை, ஊதப்பநாயக்கனூர் மலட்டாறு அணை உள்ளிட்ட பகுதிகள் மதுரை மாவட்டத்தின் நீர்வழி பள்ளத்தாக்கு பகுதிகளாகும். வண்ணத்துப்பூச்சிகள் பூங்கா அமைக்க தகுந்த ஈரமான நிலப்பகுதிகள் என்று மேற்சொன்ன அணைப்பகுதிகளை மதுரை மாவட்ட நிர்வாகத்திடமும், வனத்துறையிடமும் கோரிக்கை வைத்துள்ளோம்.
| Nilgiri Four Ring |
வண்ணத்துப்பூச்சிகள் குறித்த விழிப்புணர்வை மேம்படுத்தும் வகையில் திருச்சி, கோவை, பொள்ளாச்சியில் உள்ளதை போல மதுரையிலும் வண்ணத்துப்பூச்சிகள் பூங்கா அமைக்க தமிழ்நாடு அரசு முன் வர வேண்டும். இயல் தாவரங்களை கொண்டே வண்ணத்துப்பூச்சிகள் பூங்கா அமைக்க வேண்டும். சூழலியல் அறிஞர்கள் மற்றும் தமிழ் அறிஞர்களை உள்ளடக்கிய குழுவை ஏற்படுத்தி பறவைகள், பூச்சிகள், ஊர்வனங்கள் என பல்லுயிரிகள் அனைத்திற்கும் தமிழில் பொதுப்பெயர் வைக்கும் முயற்சிகளை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் வண்ணத்துப்பூச்சிகள் குறித்து விழிப்புணர்வு அனைத்து தரப்பட்ட மக்களுக்கும் பரவலாக சென்று சேரும்.
ஐந்து குடும்பத்தை சேர்ந்த மொத்தம் 162 வண்ணத்தத்துப்பூச்சி இனங்கள் மதுரை மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் அழகிகள் (Swallotails) - 12, துள்ளி-தாவிகள் (Skippers) - 25, வெள்ளையன் & புல்வெளியன்கள் (whites and Yellows) - 25, நீலன்கள் (Blues) - 48, வரியன்கள் - சிறகன்கள் (Brush footed butterflies) - 52 என 162 வகையான வண்ணத்து பூச்சிகளை ஆவணப்படுத்தியுள்ளோம். உலோக வரையன்கள் (Riodinidae) என்ற பட்டாம்பூச்சி குடும்பத்தை தவிர அனைத்து பட்டாம்பூச்சி குடும்பங்களும் மதுரையில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. மதுரை மாவட்டத்தில் பறவைகள் கணக்கெடுப்பு நிகழ்த்தப்படுவதை போல, வண்ணத்துப்பூச்சிகளுக்கு கணக்கெடுப்பு வனத்துறை சார்பாக நடத்த முன்வர வேண்டும். வண்ணத்துப்பூச்சிகளை ஆவணம் செய்யும் தொடர்ச்சியான முயற்சிகள், நிகழ்வுகள் மேற்கொள்ளும் பொழுது, மதுரை மாவட்டத்தில் வண்ணத்துப்பூச்சி இனங்களின் எண்ணிக்கை கூடுதலாகும்.
ஆய்வில் பங்கெடுத்த ம.இ.ப அறக்கட்டடளை குழுவினர்: பு.இரா.விஸ்வநாத், ரா.வித்தோஷ், ரா.கீர்த்திவாசன், பா.சிவபாலாஜி, அன்புசெல்வன் மற்றும் க.வருண்ராஜ் - மதுரை மாவட்டம் குறிப்பு:
- அழகர் கோயில் பகுதி மதுரை மாவட்ட நிர்வாகத்திற்க்குள்ளும், அழகர்மலை வனப்பகுதி திண்டுக்கல் வனக்கோட்டத்திற்குள்ளும் இருப்பது போல சதுரகிரி மகாலிங்கம் கோயில் பகுதி மதுரை மாவட்ட நிர்வாகத்திற்க்குள்ளும், சதுரகிரி வனப்பகுதி மேகமலை ஸ்ரீவில்லிபுத்தூர் புலிகள் சரணாயலத்திற்குள்ளும் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் வனத்துறையால் சதுரகிரி மலைக்கு அனுமதிக்கட்ட நாளில் (28.12.2024) இந்த பயணம் மேற்கொள்ளப்பட்டது. பக்தர்கள் அனுமதிக்கப்பட்ட மலைப்பாதையில் இருந்து குளிராட்டி அருவி பகுதி வரை காலை 06.30 மணி முதல் மாலை 05.30 மணி வரை வண்ணத்துப்பூச்சிகள் இருப்பை ஆவணம் செய்தோம்.
- இக்கட்டுரையில் வண்ணத்துப்பூச்சிகளுக்கு தமிழில் வழங்கப்பட்டிருக்கும் பெயர் அதிகாரபூர்வமானது அல்ல. தமிழில் படிப்போரின் வசதிக்காக ஆங்கிலத்தில் உள்ளதை அப்படியே தமிழில் மொழி பெயர்த்து இருக்கிறோம். தமிழகச் சூழலில் வண்ணத்துப்பூச்சிகளுக்கு தமிழ் பெயரிடுதல் ஓர் துவக்க நிலையில்தான் உள்ளது. அது இன்னும் மேம்பட வேண்டும். அதற்கான துறைசார் நடவடிக்கைகளை அங்கங்கே தன்னார்வ அமைப்புகள் செய்து வருகின்றன. தமிழ்நாடு அரசு பல்லுயிரிகளுக்கு தமிழ் பெயரிடும் முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டும்.
Check List of Mahalingam Sivan Temple, Sathuragiri, Saptur RF
Starting point: Karuppasami Temple, Foothills of Saturagiri Hill, Vazhaithoppu, Anaikaraipatti, Peraiyur, Madurai District
End Point: Kuliraatti Falls, Midway of Mahalingam Sivan Temple, Sathuragiri
Team: P.R Viswanath, R.Vithos, R.Keerthivasan, P.Sivabalaji, Anbu Selvan & G.Varunraj
Date: 28.12.2024, Sunday
Time: 6.30 AM to 5.30 PM
First Time record to Madurai district: (As per MNCF Butterfly species list of Madurai District):
1. Peacock Royal, 2. Striated Five Ring, 3. Malabar Spotted Flat, 4. Dark Palm Dart, 5. Orange Owlet, 6. Southern Banded Bluebottle, 7. Nilgiri Four Ring
Total Checklist: 58 species
Swallowtails/Papilionidae:
1.Common lime, 2.Common Mormon, 3.Blue Mormon, 4.Crimson Rose, 5.Common Rose, 6.Common Jay, 7.Tailed Jay, 8. Narrow banded Bluebottle, 9.Common Banded Peacock, 10. Southern Birdwing
Blues/Lycaenidae:
11.Common Cerulean, 12.Common Pierrot, 13.Forget me not, 14.Lime blue, 15.Zebra blue, 16.Common line blue, 17.Tailless line blue, 18.Tiny Grass blue, 19.Red Flash, 20.Slate Flash, 21.Indigo Flash, 22.Peacock Royal
Whites & Yellows/ Pieridae:
23.White orange tip, 24.Yellow orange tip, 25.Great orange tip, 26.Three spot grass yellow, 27.Common Grass yellow, 28.Small Grass yellow, 29.Common emigrant, 30.Mottled Emigrant, 31.Common gull, 32.Common Jezebel, 33.Psyche,
Nymphalidae:
34.Chocolate Pansy, 35.Lemon Pansy, 36.Common Castor, 37.Angled Castor, 38.Tawny coster, 39.Plain tiger, 40.Dark Blue tiger, 41.Common crow, 42.Danaid Eggfly, 43 Great Eggfly, 44.Double Banded Crow, 45.Stirated Five Ring, 46.White four ring, 47.Common Bushbrown, 48.Tamil Bushbrown, 49.Common Nawab, 50.Common Sailer, 51. Chestnut Streaked Sailer, 52. Common Evening Brown, 53. Dark Evening Brown, 54. Nilgiri Four Rings,
Skipper/Hesperiidae:
55.Malabar Spotted Flat, 56.Common Snow Flat, 57.Dark Palm Dart, 58. Parnara spp, 59.Orange Awlet.
மதுரை இயற்கை பண்பாட்டு மையம் (MNCF)
03.01.2025
Comments
Post a Comment