கள்ளங்காடு பெருங்கற்கால சின்னங்களும் அழகுநாச்சியம்மன் கோயில்காடும்
கள்ளங்காடு பெருங்கற்கால சின்னங்களும் அழகுநாச்சியம்மன் கோயில்காடும் மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியம், வஞ்சிநகரம் ஊராட்சிக்கு உட்பட்ட மூவன் சிவல்பட்டி, நாகப்பன் சிவல்பட்டி, கள்ளங்காடு உள்ளிட்ட கிராமங்களில் பலநூறு ஏக்கர் பரப்பளவில் தொன்மையான கோயில்காடுகளும், தொல்லியல் மேடுகளும், பிற்கால பாண்டியர் கோயிலும் காணப்படுகிறது. சுமார் 3500 ஆண்டுகள் தொன்மையான கல்பதுக்கை, கற்திட்டை, குத்துக்கல், கல்வட்டம், கற்குவியல், முதுமக்கள் தாழி உள்ளிட்ட பல வகையான பெருங்கற்கால சின்னங்கள் நூற்றுக்கணக்கில் இப்பகுதியில் காணப்படுகிறது. மேலும் இப்பகுதியில் சிவப்பு நிற பானை ஓடுகள், சுட்ட செங்கற்கள், இரும்பு கசடுகள் படிந்த செம்புரான் கற்கள் இப்பகுதி முழுதும் கிடைக்கின்றன. நாட்டார் வழிபாட்டில் பண்பாட்டு மற்றும் பல்லுயிரிய முக்கியத்துவம் வாய்ந்த கோயில் காடுகளும் இப்பகுதியில் காணப்படுகிறது. அழகு நாச்சியம்மன் கோயில் காடும், பெருங்காட்டு கருப்பு கோயில் காடும் இப்பகுதியில் ஆவணம் செய்யப்பட்டுள்ளது. இக் கோயில்காடுகளில் தேவாங்கு, காட்டு பூனை, மரநாய்...
Comments
Post a Comment