புத்தூர்மலை - பண்பாட்டுச் சூழல் நடை
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி வட்டம்த்தில் உள்ள புத்தூர் மலைக்கு 20.04.2025, ஞாயிறு அன்று காலை பண்பாட்டு சூழல் நடையின் 30வது பயணமாக சென்று இருந்தோம். இந்நிகழ்வில் ஏறக்குறைய 100 பேர் வரை பங்கெடுத்தனர்.
மலைப்பட்டியிலிருந்து அரை கிலோமீட்டர் தெற்கில் உள்ள புத்தூர் மலையின் அடிப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள, ஆண்டிக்கல் எனப்படும் ஒரு பெரிய பாறையின் கீழ் உள்ள ஒரு கல்லில் சமணசமய தீர்த்தங்கரர்களான பாகுபலி, ஆதிநாதர், பார்சுவநாதர் மற்றும் மகாவீரர் ஆகியோரின் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இந்தச் சிற்பங்கள் பிற்பாண்டியர் காலத்தைச் சேர்ந்தவைகளாக இருக்கலாம். பாகுபலியின் உருவம் விளக்குத்தூணால் மறைக்கப்பட்டுள்ளது . இச்சிற்பங்களுக்கு இடையே ஒரு பிற்காலத் தமிழ்க் கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டின் எழுத்தமைதி தற்காலத் தமிழ் எழுத்தை பெரிதும் ஒத்துள்ளதால், இதை சென்ற நூற்றாண்டின் பின்பகுதி அல்லது இந்நூற்றாண்டின் முன்பகுதியைச் சேர்ந்ததாக ஊகிக்கலாம். இக்கல்வெட்டில், கள்ளழகர் சாமியை புதிப்பித்ததாகக் கூறும் சொற்றொடரும் மகாவீரர் மற்றும் பார்சுவநாதர் சிற்பங்களுக்கு இடையில் காணப்படும் 'பறம்மா' என்ற சொல்லும் தெளிவாகத் தெரிகின்றன. மேலும் பார்சுவநாதரின் நெற்றியில் வைணவ சமய குறியீடு பொறிக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து இந்த சமண சிற்பங்களை இந்து சமய கடவுளாக மாற்றி அமைக்க முயற்சி செய்யப்பட்டிருப்பதாக தெரிகிறது. (ம. காந்திராஜன் & சு. கண்ணன், ஆவணம் 1999, பக் 108)
புத்துர்மலையில் உள்ள சமணத் தீர்த்தங்கர் சிலைக்கு மீசை செதுக்கப்பட்டுள்ளது. இதே போல திருச்சி மாவட்டம், முசிறி வட்டம் மங்கலம் என்னும் ஊரில் அரவாண்டியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் அமரந்த நிலையில் 68 அங்குலம் உயரமுள்ள புத்தர் சிலை வழிபாட்டில் உள்ளது. சிலையின் பீடத்தில் அமர்ந்த நிலையில் உள்ள மூன்று சிங்கங்கள் காணப்படுகின்றன. வேறு எங்கும் காணாத வகையில் புத்தர் சிலைக்கு மீசையுள்ளது. (பா. ஜம்புலிங்கம், நூல் - தமிழ் கலை, கட்டுரை: சோழநாட்டில் மீசையுடன் புத்தர் சிலை, ஏப்ரல் 2009)
ஆனையூர் பெரிய கண்மாய்:
- கட்டக்கருப்பன்பட்டி சர்வே எண்: 84
- கொள்ளளவு (Capacity): 0.73 MCM
- முழுக் கொள்ளளவு (FTL): 184.63 M
- அதிகபட்ச நீர்க்கொள்ளளவு (MWL): 182.23 M
- கரையின் மட்டம் (TBL): 186.48 M
- ஆழம் (Storage Depth): 4.02 M
- பாசனம் பெரும் பகுதி (Ayacut): 47.07 ஹெக்டேர்
- நீர்ப்பிடிப்பு பகுதி (Catchment in Sq Km): 40.87 சதுர கிமீ
- நீரின் பரவல் (Water Spread Area ): 42.48 ஹெக்டேர்
- கலிங்கு (No of Weir): 2.0
- கலிங்கு நீளம் (Weir Length): 24.30 M
- மடை (No of Sluice): 1.0
- கரையின் நீளம் (Bund Length): 1715.5 M
- பரப்பளவு: சுமார் 125 ஏக்கர் (Google Earth)
- சுற்றளவு: 3.1 கி.மீ (Google Earth Measurement- Marking Survey
No 84)
Source: https://madurai.nic.in/water-bodies-in-madurai-district & TamilNilam Geo App
ஒளிப்படங்கள்: வெங்கட்ராமன், ஜோதிமணி, சதீஷ்குமார், விஷ்வா, தமிழ்தாசன்
Comments
Post a Comment