வைகையின் பல்லுயிரியச் சூழல் - கருத்தரங்கு
வைகையும் பல்லுயிரியச் சூழலும் - கருத்தரங்கம்
மதுரை இயற்கை பண்பாட்டு அறக்கட்டளை ஒருங்கிணைப்பில் வைகையும் பல்லுயிரியச் சூழலும் என்ற தலைப்பில் கடந்த 22.03.2025, சனிக்கிழமை மாலை கருத்தரங்கு நடைபெற்றது. இந்நிகழ்வில் மதுரையில் தன்னலமற்று இயங்கும் பல சமூக செயற்பாட்டாளர்களின் சமூகப்பணியை பாராட்டும் விதமாக மதுரை இயற்கை பண்பாட்டு அறக்கட்டளை சார்பாக நினைவு பரிசு வழங்கப்பட்டது.
கடந்த ஜனவரி மாதம் ''தட்டான்கள் புகைப்பட போட்டி'' ஒன்றை அறிவித்து இருந்தோம். அப்போட்டியில் வெற்றியாளர்களாக தேர்வானவர்களுக்கு சான்றிதழ் மற்றும் நினைவு பரிசு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் ''வைகை பல்லுயிரியச் சூழல்'' மற்றும் ''அரிட்டாபட்டி தமிழ்நாட்டின் முதல் பல்லுயிரிய மரபு தளம்'' உள்ளிட்ட இரண்டு நூல்கள் வெளியிடப்பட்டன.
இந்நிகழ்வில் பங்கேற்ற அனைவருக்கும் இந்நிகழ்விற்கு இடமளித்த கிரேஸ் கென்னேட் மருத்துவமனை நிர்வாகத்திற்கும், இந்நிகழ்வு தொடர்பான செய்திகளை வெளியிட்ட அச்சு ஊடகங்களுக்கும் மற்றும் அதன் ஊழியர்களுக்கும் நன்றியை உரித்தாக்குகிறோம். கருத்தரங்கு நிகழ்வில் எடுக்கப்பட்ட சில ஒளிப்படங்களை இங்கே பகிர்ந்துக் கொள்கிறோம்.
மதுரை இயற்கை பண்பாட்டு அறக்கட்டளை (MNCF)
Comments
Post a Comment