பொன்னழகன் வண்ணத்துப்பூச்சி

தென்னிந்தியாவின் மிகப்பெரிய வண்ணத்துப்பூச்சியான பொன்னழகன் (Southern Birdwing) மதுரை மாவட்டம், பேரையூர் வட்டம், எழுமலை நகருக்குள் ஆவணம் செய்யப்பட்டுள்ளது. பொன்னழகன் வண்ணத்துப்பூச்சி தென்னிந்தியாவில் மட்டுமே காணப்படும் ஒரு அகணிய உயிரினமாகும்.

Photo by Mr. A. Naveen at Elumalai, Madurai district on 04.10.2025


பொன்னழகன் வண்ணத்துப்பூச்சி ஏற்கனவே மதுரை சதுரகிரி மலை, வாசிமலை ஆகிய மலையடிவாரத்தில் கடந்த வருடம் ஆவணம் செய்யப்பட்டது. பொதுவாக மரங்கள் சூழ்ந்த காட்டுப்பகுதியில், மலையடிவாரத்தில் காணப்படும் பொன்னழகன் வண்ணத்துப்பூச்சிகள், குடியிருப்புகள் நிறைந்த நகருக்குள் காண்பது அரிது. இந்நிலையில் அடர்ந்த குடியிருப்புகள் சூழ்ந்த எழுமலை நகருக்குள் ஒரு மரத்தில் பொன்னழகன் பட்டாம்பூச்சியை மதுரை இயற்கை பண்பாட்டு குழுவினர் புகைப்படக் கருவி மூலம் பதிவு 04.10.2025 அன்று பதிவு செய்துள்ளனர். எழுமலை பகுதியில் எடுக்கப்பட்ட பொன்னழகன் பட்டாம்பூச்சியின் புகைப்படம் இப்பதிவில் இணைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் காணப்படும் வண்ணத்துப்பூச்சிகளில் இரண்டாவது பெரிய வண்ணத்துப்பூச்சியாக பொன்னழகன் அறியப்படுகிறது. 190 மில்லிமீட்டர் வரை நீளமுடைய இறகுகள் கொண்ட பொன்னழகன் கண்டறியப்பட்டுள்ளன. வட இந்திய மற்றும் இமாலய பகுதிகளில் காணப்படும் பொன்னழகன் (Golden Birdwing - Troides aeacus) தான் இந்தியாவில் காணப்படும் மிகப் பெரிய வண்ணத்துப்பூச்சி ஆகும். 194 மில்லிமீட்டர் நீளமுடைய இறகுகள் கொண்ட வட பொன்னழகன் வண்ணத்துப்பூச்சிகள் கண்டறியப்பட்டுள்ளன.

தென்னிந்தியாவில் காணப்படும் பொன்னழகனும் (Southern Birdwing), வட இந்தியாவில் காணப்படும் பொன்னழகனும் (Golden Birdwing) ஒரே குடும்பத்தை சேர்ந்து வெவ்வேறு சிற்றினமாகும்.


Common Name: Southern Birdwing
Binomial Name: Troides minos
Family: Papilionidae (Swallowtail)

மதுரை இயற்கை பண்பாட்டு அறக்கட்டளை (MNCF)

Comments

Popular posts from this blog

கள்ளங்காடு பெருங்கற்கால சின்னங்களும் அழகுநாச்சியம்மன் கோயில்காடும்

வைகையாறு உயிர்ச்சூழல் - பண்பாட்டுச் சூழலியல் நோக்கில் ஆய்வு

வறல் புல்வெளிகள், கள்ளிக்குடி - பண்பாட்டுச் சூழல் நடை