அந்தி நடை - கபாலி மலை

பகல் நேரத்து தரிசனங்கள் வழியாகத்தான் நமக்கு இந்த பல்லுயிரியச் சூழல் பரிச்சியப்படுகிறது. பகாலடி மற்றும் இரவாடிகளை கொண்ட உலகத்தின் ஒருபகுதியைத் தான் நாம் அறிந்து வைத்திருக்கிறோம். குறிப்பாக இரவாடி உயிரினங்கள் பற்றி பகாலடி உயிரினமான மனிதன் அறிவதில்லை.







பெருகிவரும் நகரங்கள் மின் விளக்குகளால் சூழப்பட்டுள்ளது. அதன் காரணமாக ஒளிமாசு (Light Pollution) அதிகரிப்பதாக ஆய்வளர்கள் எச்சரித்து வருகின்றனர். சூழல் சீர்கேடுகளில் நீர் மாசு, காற்று மாசு, ஒலி மாசு அறிந்திருப்போம். ஆனால் ஒளி மாசு என்பது நாம் அதிகம் அறியாத அல்லது உரையாடாத பகுதி. பகலுக்கும் இரவுக்கும் வேறுபாடு இல்லாத வகையில் வெளிச்சம் நகரங்களை எப்போதும் சூழ்ந்துள்ளது.

இரவாடி உயிரினங்களின் இயல்பு, நடத்தை, இனப்பெருக்கம் மற்றும் இடம்பெயர்வை ஒளிமாசு பெரிதும் பாதிக்கிறது. இரவு பூச்சிகள் மின் விளக்குகளால் ஈர்க்கப்பட்டு அழிவை சந்திக்கின்றன. இதனால் உணவுச் சங்கிலி பாதிக்கப்படுகிறது.

அவ்வகையில் இரவாடிகளின் உலகை அறிந்துக் கொள்ளும் வகையில் மதுரை இயற்கை பண்பாட்டு அறக்கட்டளை சார்பாக அந்தி நடை கடந்த 06.12.2025 அன்று ஒருங்கிணைக்கப்பட்டு இருந்தது. இந்நிகழ்வில் முன்பதிவு செய்திருந்த 20 பேர் பங்கெடுத்தனர்.








இரவாடி பறவைகள், ஊர்வனங்கள், பூச்சிகள், சிலந்திகள் குறித்து அறிந்து கொள்ளும் வகையில் காட்டுயிர் ஆய்வாளர் திரு. விஸ்வா அவர்கள் பங்கேற்பாளர்களுக்கு நேரிடை விளக்கமளித்தார். பறவையியலாளர் மரு.பத்ரி நாராயணன், மரு. ஹீமோகுளோபின் அவர்களும் இரவாடி பறவைகளை ஆவணம் செய்தனர். மாலை 5 மணிக்கு கபாலி மலையடிவாரத்தில் துவங்கிய நிகழ்வு இரவு 7 மணிக்கு மேல் நிறைவு செய்யப்பட்டது. கபாலி மலை ஏறி இறங்கினோம். அம்மலை பாதையில் உள்ள இரவாடி உயிரிகளை பற்றிய ஒரு சிறிய அறிமுகத்தை வந்திருந்தவர்களுக்கு இந்நிகழ்வு ஏற்படுத்தி இருக்கும் என்று நம்புகிறோம்.

அந்தி நடையில் கபாலி மலையில் கீழ்காணும் உயிரினங்கள் திரு விஸ்வா மற்றும் குழுவினரால் ஆவணம் செய்து அடையாளம் காணப்பட்டன.
  • Crematogaster Ant
  • Green Locust
  • Geometric Moth
  • Wandering Glider
  • Short horned gaudy grasshopper
  • Red Spines Millipede
  • Tanaemyrmex Ant
  • Katydid Convolvulus Hawkmoth
  • Handmaiden moth
  • Scaly cricket
  • Crab spider
  • Plume moth
  • Rachis punctata snail
  • Giant huntsman spider
  • Slender crab spider
  • Stick insect
  • Bristletail silver fish
  • Inland flood water mosquito
  • Indian red scorpion
  • Whip scorpion
  • Wolf Spider
  • Termite hill gecko
  • Swift butterfly
  • Giant Forest Scorpion
  • Indian scops owl
  • Giant Millipede
  • Two-Striated Ariophanta snail
  • Stink bug
  • Stenocatantops splendens grasshopper
  • Green Huntsman Spider
  • White Lynx Spider
  • Red Headed Centipede
  • Scopula Moth
  • Orb weaver Spider
  • Brahminy Blind Snake
  • Striped Pierrot butterfly


ஒளிப்படங்கள்: திரு. விஸ்வா, சதிஸ்குமார், வெங்கட்ராமன், பால கிருஷ்ணா

மதுரை இயற்கை பண்பாட்டு அறக்கட்டளை (MNCF)




























Comments

Popular posts from this blog

கள்ளங்காடு பெருங்கற்கால சின்னங்களும் அழகுநாச்சியம்மன் கோயில்காடும்

வறள் புல்வெளிகள், கள்ளிக்குடி - பண்பாட்டுச் சூழல் நடை

அருவிமலை - பண்பாட்டுச் சூழல் நடை