பல்லுயிரிய சூழல் பாதுகாப்பு முதன்மையாளர் விருது 2025-26

மாவட்டம் அல்லது உள்ளூர் அளவில் பல்லுயிரிய சூழல் பாதுகாப்பில் சிறப்பான பங்களிப்பைச் செய்து வரும் சூழல் ஆர்வலர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களுக்கு வனத்துறை சார்பாக ‘சூழல் பாதுகாப்பு முதன்மையாளர்’ (Community Conservation Leadership Award) விருது வழங்கப்படுகிறது.



தமிழ்நாடு முழுவதும் 2025-26 ஆம் ஆண்டில் சூழல் பாதுகாப்பில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கிய பல சூழல் ஆர்வலர்களுக்கு இவ்விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த மருத்துவர் தி. பத்ரிநாராயணன், ந. இரவீந்திரன், இராமசாமி, பு.இரா. விஸ்வநாத், வெ. கார்த்திக் ஆகியோருக்கு 25.02.2026 அன்று விருது அறிவிக்கப்பட்டது.

சூழல் பாதுகாப்பு முதன்மையாளர் விருது பெற்ற அனைவரும் பல்லுயிரிய சூழல் பாதுகாப்பில் சிறப்பான பங்களிப்பைச் செய்தவர்கள் என்பதில் ஐயமில்லை. அவர்கள் அனைவரும் இவ்விருதிற்கு தகுதியானவர்களே.

03.03.2026 அன்று மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் மதுரை மாவட்ட வன அலுவலர் கைகளில் 'சூழல் பாதுகாப்பு முதன்மையாளர்' விருது பெற்ற அனைவருக்கும் ‘மதுரை இயற்கை பண்பாட்டு அறக்கட்டளை’ தனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறது.

Madurai Nature Cultural Foundation
24.03.2026





















Comments

Popular posts from this blog

கள்ளங்காடு பெருங்கற்கால சின்னங்களும் அழகுநாச்சியம்மன் கோயில்காடும்

இராமநாதபுரம் கிழக்கு கடற்கரையின் பல்லுயிர் சூழலும் பண்பாட்டுக் கூறுகளும்

அருவிமலை - பண்பாட்டுச் சூழல் நடை