ஒளிப்பட நடை - குன்னத்தூர்
கடந்த 25.01.2026 ஞாயிறு காலை ஒளிப்பட நடை மதுரை, வரிச்சூர் - குன்னத்தூர் பகுதியில் நாடடைபெற்றது. இந்நிகழ்வில் 15 பேர் பங்கெடுத்தனர். இயற்கை மற்றும் வரலாற்றுத் தளங்களை எவ்வாறு காட்சியில் கொண்டு வர வேண்டும். ஒளிப்படங்கள் எவ்வாறு அமைய வேண்டும் என்பது குறித்து ஒளிப்பட கலைஞர் வீரேஷ் பங்கேற்பாளர்களுக்கு எடுத்துரைத்தார். குன்னத்தார் கண்மாய், உதயகிரி ஈஸ்வரர் குடைவரை, அஸ்தகிரிஈஸ்வரர் குடைவரை, நீலகண்டேஸ்வரர் குடைவரை உள்ளிட்ட 1300 ஆண்டுகள் பழமையான மூன்று குடைவரை கோயில்கள்; மூலபல ஈஸ்வரம், ஊர் காலவன் கோயில், தனியானை ஈஸ்வரம் கோயில், பெருமாள் கோயில் உள்ளிட்ட 800 ஆண்டுகள் பழமையான பிற்பாண்டியர் கால கோயில்கள்; பாபா புகர்தீன் தர்கா, மகாலட்சுமி கோயில் உள்ளிட்ட நாட்டார் கோயில்கள் இந்த ஒளிப்பட நடையில் காட்சியாக ஆவணம் செய்யப்பட்டது. மூன்று குடைவரை கோயில்கள் தமிழ்நாடு அரசாலும், தனியாராலும் பாதுகாக்கப்படுகிறது. பிற்பாண்டியர் கால கோயில்கள் பராமரிப்பின்றி சிதைந்த நிலையில் உள்ளது. அதை தமிழ்நாடு அரசு பாதுகாக்க வேண்டும்.
Photographs - Veeresh R
மதுரை இயற்கை பண்பாட்டு அறக்கட்டளை (MNCF)
Comments
Post a Comment